‘ரா’ கொலை செய்ய சதி: பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம்

 

‘ரா’ கொலை செய்ய சதி: பிரதமர் மோடியிடம் இலங்கை அதிபர் விளக்கம்

இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் விளக்கமளித்துளார்

கொழும்பு: இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதி செய்ததாக இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன கூறியதாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மோடியிடம் அவர் விளக்கமளித்துளார்.

இலங்கையில் வாரம் தோறும் நடக்கும் அமைச்சரவை கூட்டத்தில் பேசிய அன்ன்நாட்டு அதிபர் சிறிசேன, இந்திய உளவு அமைப்பான ‘ரா’ தன்னை கொலை செய்ய சதி செய்ததாகவும், பிரதமர் மோடிக்கு இதுகுறித்து தெரியாது என கூறியதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், இரு நாட்டு உறவுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் இந்த விவகாரம் தொடர்பாக, இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேன, பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விளக்கமளித்துளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊடகங்களில் வெளியான விஷமத்தனமான மற்றும் பொய்யான இந்த செய்தி தவறானது. ஆதாரமற்றது. இரு நாடுகளின் தலைவர்கள் மற்றும் உறவுக்கு பாதிப்பு ஏற்படுத்தவே இந்த செய்தி வெளியிடப்பட்டு உள்ளது. இலங்கையின் உண்மையான நண்பராக பிரதமர் மோடி உள்ளார். அவருடன் இணைந்து இரு நாட்டு உறவை பலப்படுத்த பணியாற்றுவேன் என சிறிசேன தெரிவித்ததாக கூறப்பட்டுள்ளது.

தவறான செய்தி குறித்து அதிபரும், இலங்கை அரசும் விளக்கம் அளித்தது பாராட்டுக்கு உரியது என இலங்கை அதிபரிடம் பிரதமர் மோடி தெரிவித்ததாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.