ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

 

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் இந்தியாவில் அறிமுகம்

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டெல்லி: இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 பைக்கின் டிரிபியூட் பிளாக் லிமிட்டெட் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே தயாரிக்கப்பட்டிருக்கும் இந்த பைக்கின் விற்பனை வருகிற பிப்ரவரி 10-ம் தேதி மதியம் 2.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Classic 500 Tribute Black

இந்த பைக்கானது 499சிசி சிங்கிள் சிலிண்டர் என்ஜின் கொண்டிருக்கிறது. இது 27.2 பி.ஹெச்.பி. பவர், 41.3 என்.எம். டார்க் செயல்திறன் வழங்குகிறது. இந்த பைக்கில் 5-ஸ்பீடு கியர்பாக்ஸ் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு பைக்கில் பிரத்யேக குறியீட்டு எண் பொறிக்கப்பட்டு டூயல் டோன் ஃபினிஷ் வழங்கப்பட்டுள்ளது. புதிய லிமிட்டெட் எடிஷன் மாடலுடன் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 500 மாடல் பைக்குகளின் விற்பனை நிறுத்தப்படுகிறது. இதற்கு மாற்றாக ராயல் என்ஃபீல்டு நிறுவனம் 650சிசி பைக்குகளின் விற்பனையில் கவனம் செலுத்த திட்டமிட்டுள்ளது.