ராம்-ஜானு மீது காதலில் விழுந்த விக்கெட் கீப்பர்!

 

ராம்-ஜானு மீது காதலில் விழுந்த விக்கெட் கீப்பர்!

விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

சென்னை: விஜய் சேதுபதி-த்ரிஷா நடித்த ‘96’ திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பாராட்டியுள்ளார்.

பிரேம்குமார் இயக்கிய ‘96’ திரைப்படம் பள்ளிப்பருவ காதலை மையப்படுத்தி வெளியானது. காதலர்கள் கொண்டாடித் தீர்த்த ‘96’ படத்தின் ராம், ஜானு கதாபாத்திரம் எதார்த்தமாக இருந்ததுடன், ரசிகர்களின் மனதுக்கு நெருக்கமான படமாக அமைந்து வெற்றி பெற்றது.

50 நாட்கள் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி, ரசிகர்களை கவர்ந்த ‘96’ திரைப்படத்தை இந்திய கிரிக்கெட் பிரபலம் ஒருவர் பாராட்டியுள்ளார். இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பரும், பேட்ஸ்மேனுமான தினேஷ் கார்த்திக், ‘96’ திரைப்படத்தை பார்த்துவிட்டு படக்குழுவை வெகுவாக பாராட்டியுள்ளார்.

இது குறித்து டிகே பகிர்ந்துள்ள ட்வீட்டில், ‘சமீபமாக விஜய் சேதுபதியின் தீவிர ரசிகராக உள்ளேன். ‘96’ படத்தில் அவரது நடிப்பு அமேசிங். என்ன அழகான படம். 96 மீது காதலுற்று இருக்கிறேன். ’காதலே காதலே..’ எனக்கு மிகவும் பிடித்த பாடல். அருமையான பாடல். படத்தின் ஒவ்வொரு ஃபிரேமும், இசையையும் ரசித்தேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும், தனது சக விளையாட்டு வீரர்களான வாஷிங்டன் சுந்தர், அபினவ் முகுந்த், ஃபிட்னஸ் கோச் ஷங்கர் பாஸு ஆகியோருக்கும் இப்படம் மிகவும் பிடித்திருந்ததாகவும், அஷ்வின் உங்களுக்கு எப்படி என்றும் ட்வீட்டியுள்ளார்.