ராமையாவாக பிறந்து இனமான பேராசிரியரான ஓர் சகாப்தத்தின் வரலாறு!

 

ராமையாவாக பிறந்து இனமான பேராசிரியரான ஓர் சகாப்தத்தின் வரலாறு!

அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

மூத்த அரசியல் தலைவரும் திமுக பொதுச்செயலாளருமான க.அன்பழகன் உடல் நலக்குறைவு காரணமாக  இன்று அதிகாலை 1 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 98.   அவரது உடல் கீழ்ப்பாக்கத்தில் உள்ள அவரது  இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது. அவருக்கு திமுக நிர்வாகிகள், தொண்டர்கள் என பலரும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். 

 

 

1922 கல்யாணசுந்தரம் சொர்ணம் இணையரின் மூத்த மகனாகப் பிறந்தார் ராமையா.                    

1933 மடமையை வளர்க்காதீர் மாமாங்கம் போகாதீர் பரப்புரை ஆற்றினார்.      

1942 மறைமலை அடிகளின் தனித்தமிழ் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டு ராமையா என்கின்ற தனது பெயரை அன்பழகன் என மாற்றிக் கொண்டார்.

1943 சிதம்பரத்தில் நடைபெற்ற நீதிக்கட்சி மாநாட்டில் பெரியாருடன் சொற்பொழிவு 

1944 பிஏ ஹானர்ஸ் பட்டம் பெற்றார்

1945 பெரியார் தலைமையில் பேராசிரியர் வெற்றிச்செல்வி அம்மையார் திருமணம்.

1948 புதுவாழ்வு இதழாசிரியர் 

 

1949 ராபின்சன் பூங்காவில் திமுக தொடக்க விழாவில் முக்கிய பங்காற்றி சிறப்புரையாற்றினார்

1957 எழும்பூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி. 

1959 திமுக தொழிற்சங்க செயலாளராக பொறுப்பேற்றார்   

1962 சட்டமன்ற மேலவைக்கு   தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1964 இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட 6 மாதம் சிறை தண்டனை பெற்றார்

1967 திருச்செங்கோடு நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றி 

1978 திமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1983 ஈழத் தமிழர்களுக்காகக்  கலைஞரும் பேராசிரியரும் சட்டமன்ற பதவியை துறந்தனர். 

 

ttn

1989 அண்ணாநகரில் வென்று கலைஞர் அமைச்சரவையில் கல்வி அமைச்சரானார்

1989 அண்ணாமலை பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கியது.

2006 துறைமுகம் தொகுதியில் வென்று ஒன்பதாவது முறையாக சட்டமன்ற உறுப்பினரானார். நிதி அமைச்சர் பதவி வகித்தார். 

2017 மு க ஸ்டாலின் செயல் தலைவராக முன்மொழிந்தார் 

2018 ல் திமுக தலைவராக முன்மொழிந்தார்

2020 தனது 98வது வயதில் பேராசிரியர் பெருந்தகை காலமானார்