ராமாயண காலத்துக்குப் பிறகு வானர படைகளின் நிலைமை என்னாச்சு தெரியுமா?

 

 ராமாயண காலத்துக்குப் பிறகு வானர படைகளின் நிலைமை என்னாச்சு தெரியுமா?

நம்ம எல்லோருக்கும் இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி தெரியும். அதில் நமக்கு மேலோட்டமான கதைகளையே சொல்லி கொடுத்திருப்பங்க ஆனா அதற்குள்ளேயும் நிறைய உட்கதைகள் இருக்கு அதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் மறைந்து இருக்கிறது அது பற்றிய சில உண்மைகளை தான் இப்போது பார்க்க போகிறோம்

நம்ம எல்லோருக்கும் இந்தியாவின் இரு பெரும் இதிகாசங்களான ராமாயணம் மற்றும் மகாபாரதம் பற்றி தெரியும். அதில் நமக்கு மேலோட்டமான கதைகளையே சொல்லி கொடுத்திருப்பங்க ஆனா அதற்குள்ளேயும் நிறைய உட்கதைகள் இருக்கு அதில் நமக்கு தெரியாத பல விஷயங்கள் மறைந்து இருக்கிறது அது பற்றிய சில உண்மைகளை தான் இப்போது பார்க்க போகிறோம் . 

வானர சேனை என சொல்லபடுவது வானர அரசன் வாலியின் தலைமையில் கிஷ்கிந்தாவில் அரசாட்சி புரிந்த பராக்கிரமம் மிக்க வானர அரசன் அவன் தம்பி சுக்ரீவன். அவரது நண்பரும் மந்திரியுமாக இருந்தவர் அனுமன். இதில் வாலி வதம் அதன் பிறகு சுக்ரீவன் அரசாட்சி ஏற்றுகொண்டது, இவை எல்லாமே நமக்கு தெரிந்த கதைகள்தாம்.

ramayanam

அதன் பிறகு சுக்ரீவன் அனுமன் மற்றும் அங்கதன் தலைமையில் வானர படைகள் ராம -ராவண யுத்தத்தில் பங்கு கொண்டு  கையில் கிடைத்த மரங்கள் பாறைகள் சிறு கற்கள் எல்லவற்றையும் ஆயுதமாக கொண்டு இலங்கேஸ்வரனின் படைகளை அனுமனின் உதவியுடன் துவம்சம் செய்து யுத்தத்தில் வெற்றி வாகை சூடி கொடுத்த வானரப் படைகள் ராமாயண காலத்துக்குப் பிறகு என்ன ஆயிற்று?
அது நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை அது பற்றி இனி பார்க்கலாம்.

ராமாயணத்தில் மொத்தம் ஆறு காண்டங்கள் உள்ளன. அதில் ஏழாவது காண்டமான உத்திர காண்டத்தில் வானரங்கள் என்ன ஆயின, அவர்களின் விதி எவ்வாறு முடிந்தது எனபது பற்றி தெளிவாக  விவரிக்கப்பட்டு உள்ளது.
அவதாரமான ராமன் தன்னுடைய கடமை பூமியில் ஏகதேசம் முடித்துவிட்ட நிலையில் அவரது திருஉடலை விட்டு பூமியில் இருந்து விடைபெறும் போது யமதர்மராஜனை அழைத்து தான் சரயு நதிக்கரையில் தன்னுடைய பூலோக வாழ்கையை முடித்து கொள்கிறேன் என சொல்கின்றார்.

ramayanam

ராமனின்  நிழலாக இருந்த  லக்ஷ்மணனும்  பிரிந்து விட்டான்.உடனே வசிஷ்டாதி முனிவர்கள் , ரிஷிகள்  அமைச்சர்கள்  யாவரையும் ராமர்  அழைத்தார். பரதனுக்கு முடிசூட்டினார். நானும்  லக்ஷ்மனனைத் தொடர்ந்து இந்த பூவுலகை விட்டு செல்கிறேன் என்று பரதனிடம் கூறுகிறார் ராமர்.துக்கம் தாளாமல் பரதன் மயங்கி கீழே விழுகிறான். அனைவரும் கண்ணீர்மல்க ராமனை பார்கின்றனர் 

ramayanam

அண்ணா! நீங்கள் இல்லாத இந்த ராஜ்ஜியம் என்னக்கு வேண்டாம். உங்கள் மேல் ஆணையாக சொல்கிறேன். லவனையும் குசனையும் அரியணையில் அமரசெய்யுங்கள்.  லவன் கோசலத்தை ஆளட்டும். குசன் வடபகுதிக்கு அதிபதியாக இருக்கட்டும். நானும் உங்களுடனே வந்து விடுகிறேன் என அழுது புலம்புகின்றான்.
ராமர் சத்ருக்னனை அழைத்தார். அயோத்தியே வருத்தத்தில் ஆழ்ந்தது. இதைக்கண்ட வசிஷ்டர், ராமா மக்கள் எல்லோரும் துக்கத்தில் இருகின்றனர். அவர்களுக்கு ஆறுதல் கூறு என  வேண்டுகோள் விடுத்தார். அதனால் ராமர் தன்னுடைய மக்களை சந்தித்தார் அவர்கள் அனைவருமே ஒன்றாக சேர்ந்து பிரபோ! எம்பிரானே! நீ இல்லாத அயோத்தி எங்களுக்கு வேண்டாம். நாங்களும் குடும்பத்தோடு உன்னுடன் வருகிறோம் என கண்ணீர் மல்கி நின்றனர்.

ramayanam

இதைக் கேள்விபட்டவுடன் சுக்ரீவன் உடனே தன்னுடைய அண்ணன் வாலியின் மகன் அங்கதனுக்கு கிஷ்கிந்தையின் மன்னனாக முடி சூடிவிட்டு தானும் தன்னுடைய வானர சேனையின் ஒரு பகுதியினரும் ராமரின் இறுதி யாத்திரையில் கலந்து கொள்வதற்காக அயோத்தி நோக்கி செல்கின்றனர்.அவரது வானர சேனையுடன் ஜாம்பவான் தலைமையில் கரடி சேனைகளும் ராக்ஷ்சர்களும் ராமர் வைகுண்டம் செலும் போது தங்களுடைய பிறப்பின் கடமையை  முடித்துக்கொண்டு ஸ்ரீராம பிரானுடன் இணைந்து செல்ல புறப்பட்டு அயோத்தி நோக்கி பயணப்பட்டார்கள்.

ramayanam

அயோத்தியை வந்தடைந்தவுடனே அவர்கள் ராமரை வணங்கி நின்றனர் அப்பொழுது சுக்ரீவன், ஹே ராமா! எங்களுக்கெல்லாம் சக்ரவர்த்தியே1 ராமச்சந்திர மூர்த்தியே! உன்னுடன் நின்று பல போர்களை வெற்றி கண்டுவிட்டோம். அதேபோல் எமனின் பாசக்கயிறுக்கு முன்னே நங்கள் தோற்று விடக்கூடாது. அங்கதனுக்கு முடிசூட்டிவிட்டேன். என் கடமை எல்லாம் முடிந்துவிட்டது. நாங்களும் உன்னுடன் வருகிறோம் என கண்ணீர் மல்க நின்றான்.

ramayanam

சுக்ரீவனின் வேண்டுகோளை ஏற்று வானரப்படைகளை அவரது இறுதி யாத்திரையில் அழைத்துச்செல்ல அருள்பாலித்தார் ராமர். அத்துடன்,  என்னுடைய வரலாறு நீண்டநாள் இந்த பூவுலகில்  பேசப்படும். அதுவரையில் என்னுடன் உங்களையும் சேர்த்து உங்கள் புகழும் மக்கள்  பாடித்துதிப்பார்கள் என்ற வரத்தையும் கொடுத்தார் ராமர்.

ramayanam

ஹனுமனை தன்னருகே வரவழைத்து ஆரதழுவி, மாருதி! நீ சிரஞ்சீவியாக நீண்டகாலம் இந்த பூவுலகில் வாழ்வாயாக. என் நாமம் ஒன்றே உன் மூச்சாக இருக்க வேண்டும் என்று நீ வேண்டிய வரத்தையும் உனக்கு அளித்தேன். என் நாமம் உச்சரிக்கும் இடத்தில நீ இருப்பாய் என வரமளித்தார்.

ramayanam

உடனே அனுமன் தன்னுடைய வானர சேனைகளுக்கு ஓர் உறுதி அளிக்கிறார். பகவான் ராமபிரானின் ஆசிகளுடனும் சுக்ரீவன் மற்றும் போரில் ஈடுபட்ட தன்னுடைய வானர சேனைகளுடனும் ராமனுடன் வைகுண்டத்தில் ஐக்கியமாவர்கள்.

இதன் பிறகு இந்த நீண்ட கலிகாலம் முடியும் வரை ஜாம்பவான், முந்தன், துவிதன், நிலன், நளன் (இந்த நளன் என்ற வானரம் ராமர் இலங்கைக்கு செல்வதற்கு பாலம் கட்டியபோது அதில் முக்கியப்பங்கு ஆற்றியது) ஆகிய ஐந்து வானாரங்களை சிரஞ்சீவீயாக இருக்கும் வரத்தையும் பகவான் கொடுத்தார். அவர்கள் இன்றும் இருப்பதாக ஐதீகம்.

ramayanam
  
காலதேவன் ராமரிடம் கூறியதுபடி அவருடைய கடமை முடிந்து புறப்பட தயாராக வேண்டும் என்ற செயலுக்கு ஆயத்தமானார். பரதனின் அறிவுரைப்படி லவனையும் குசனையும் கோசலத்துக்கும் வடபகுதிக்கும் அதிபதியாகினார். இதற்கிடையில் ராமனின் தூதுவர்கள் சத்ருக்னனிடம் சென்று, காலதேவனின் வருகை துர்வாச முனிவரின் சாபம்,  லக்ஷ்மணன்னின் மறைவு, ராமனின் முடிவு பற்றி எடுத்து சொல்லியதால் சத்ருக்னன் உடனே அயோத்தி திரும்பினான்.

ramayanam
ராமரைக் கண்டு அவரது திருவடிகளில் வீழ்ந்து, அண்ணா! நானும் தங்களுடன் வருகிறேன் என்றான். சத்ருக்னனின் எண்ணத்தை புரிந்து கொண்ட ராமர், தம்பி சத்ருக்னா! பிற்பகல் புறப்படத் தயாராக இரு என அறிவுரை கூறினார். எல்லா வானரர்களும், ராட்சஸர்களும், கரடிகளும் தங்கள்  பழைய உருவமான தேவர்களாகவும், ரிஷிகளாகவும், முனிவர்களாகவும் விண்ணுலகத்தாராகவும்  மாறி, ஸ்ரீ  ராமா,  உங்களை விட்டு பிரிந்து இருப்பது என்பது  கனவிலும்  நடக்காத  ஒன்றுநாங்களும்  உங்களைத் தொடர்வோம்  என்று ராமனின் எதிரே நின்றனர்.

ராமர் வீபீஷணனை அழைத்து, சகோதரனே! இந்த பூமி இருக்கும் காலம் வரை நான் கூறிய அறவழியில் ஆட்சி செய்து வருவாய் என கூறி வீபீஷணனுக்கு சிரஞ்சீவி வரமளித்தார். தன்னை வணங்கி நின்ற ஜாம்பவானைப் பார்த்து, ஜாம்பவான்! நீ துவாபரயுகம் முடியும் வரை பூமியில் இருப்பாய். ஒரு காரணத்தை முன்னிட்டு என்னுடன் யுத்தம் புரிந்து என்னை வந்து சேர்வாய் என்ன அருள்பாலித்தார் ஸ்ரீ ராமர்.  மீதி உள்ளவர்கள் எல்லோரும் என்னுடன் வரலாம் என அவர்களுக்கும் வரமளித்தார்

மறுநாள் காலையில் சூரியன் அரைமனதோடு உதித்தான். ராமர் வசிஷ்டரிடம் அக்னிஹோத்ரா அக்னிகள்  மூன்றும்  எனக்கு  முன்னே செல்லட்டும் என்றார். வசிஷ்டர் மகா பிரயாணத்துக்குரிய  சடங்குகளை  சாஸ்த்திரப் பிரகாரம் துவங்கி முடித்தார்  பட்டாடை, பவித்ரம்  அணிந்து, ராமர் அயோத்தியிலிருந்து வெளியேறினார். அவருக்கு  இடது புறம்  லக்ஷ்மி  தேவி, வலது பக்கம்  பூமா தேவியும்  சென்றார்கள்.  சகல சாஸ்திரங்களும் வில் அம்புகளாக இருந்தவை உருவம் பெற்று அவருக்கு முன்னதாக சென்றன.  வேதங்களும் அவ்வாறே உருவம்  தாங்கி முன்பாக  சென்றன.  தேவ ரிஷிகள் உடன்  நடந்தார்கள். பிரணவம், வேதமாதா  காயத்ரி ஆகியோர் வியாஹ்ருதிகளோடு  ஹரியுடன் நடந்தார்கள். மந்திர கோஷம்  எங்கும் ஒலித்தது. 

ramayanam

ராமருடைய ராஜ்யத்தில் மிகுந்த சந்தோசத்தோடு இருந்த நகர மக்கள் தங்கள் குடும்பத்தினரோடு ராமனை பின் தொடர்ந்தனர். ராமரும் பட்டாடைகள தரித்து அரசருக்குரிய அனைத்து ஆபரணங்களையும் அணிந்து அரண்மனையில் இருந்து பரதன், சத்ருக்னன் இருவரோடும் மற்றும் குடும்பத்தினரோடும், பணியாட்கள் சேவகர்கள் கண்ணுக்குப் புலனாகாத பூத கணங்களோடும் யாத்திரையை தொடங்கினார். தூரத்தில் சரயு நதி அமைதியாக ஓடிக்கொண்டு இருந்தது. அந்த சரயு நதிக்கரையில் பிரம்மா மற்றும் கோடானு கோடி தேவர்கள் ரிஷிகள் சித்தர்கள் ராமனை வரவேற்கக் காத்திருந்தனர் ஆகாயத்தில் எண்ணற்ற புஷ்பக விமானங்கள் நறுமணம் மிக்க பூக்களை ராமரின் மீதும் அவருடன் சென்றவர்கள் மீதும் தூவின. தேவர்கள்  மற்றும் கின்னர கிம்புருஷர்கள் காந்தர்வர்கள்  இசைபாடி நின்றார்கள்.  

ramayanam

ஸ்ரீ  ராமர்  சரயுவில்  இறங்கி ஆத்ம பிரதக்ஷ்ணம் செய்தார். பிரம்மா  ராமரை வணங்கி, பரமாத்மா! தங்கள் சகோதரர்களோடு ஆதி வடிவமான விஷ்ணுவாக   தோன்றி வைகுண்டம் வந்து எங்களைக் காத்தருளுங்கள் என வேண்டி நின்றார். சரயு  நதியில் மூழ்கி எழுந்த ராமர் சங்கு சக்ரதாரியாக, சதுர் ஹஸ்த நாராயணனாக வெளித்தோன்றினார்.

ramayanam
லக்ஷ்மணன் ஆதிசேஷனாகி, பரத, சத்ருக்னர்கள் சக்கரமும் சங்குமாக  காட்சியளித்தார்கள். விஷ்ணுவின் வைகுந்த பிரவேசம்  இந்த்ராதி தேவர்களை மகிழச்செய்தது. இப்படியாக தேவர்களும் முனிவர்களும் விண்ணுலகத்தவரும்  ஸ்ரீ ராமருக்கு உதவுவதற்காக வானரப் படைகளாக பிறப்பெடுத்தும் ஸ்ரீராமரது அவதாரம் முடிந்த பிறகு அவர்களும் தங்கள் உண்மையான உருவெடுத்து சொர்க்கம் சென்றுவிட்டனர். அயோத்தி நகர மக்கள்  விலங்குகள்  யாவும் எளிய முறையில் கிடைத்தற்கரிய மோக்ஷ பதவி அடைந்தனர்.

ramayanam

அதன் பிறகு வானர படைகளிலே மிகவும் பிரசித்தி பெற்ற சிரஞ்சீவி அனுமன் தான். பல யுகங்கள் கடந்து சிரஞ்சீவியாக வாழ்ந்து வந்தாகவும் மகாபாரதக்கதைகளில் கூட காந்தமாடன மலையில் பூக்கும்  சுகந்திகா மலரை பறிக்க செல்லுகையில் பீமனை சந்தித்ததாக கதைகள் உண்டு.  அதே போல் அர்ஜுனனும் அனுமனை சந்தித்ததாக வரலாறு உண்டு.ராமேஸ்வரத்தில் ஆணவம் கொண்டு அர்ஜுனன் கட்டிய அம்புப் பாலத்தை உடைத்து எறிந்த கதைகளில் திரேதாயுகத்தில் ராமபிரான் கூறிய சில வார்த்தைகள் அனுமனுக்கு ஞாபகம் வந்தன. துவாபரயுகத்தில் நான் உனக்குக் கண்ணனாகவும் காட்சி தருவேன் என்று பகவான் கூறி இருந்தார். இந்த நினைவு வந்தவுடன் ராமபிரான் கண்ணனாக மாறி ஆஞ்சநேயருக்குக் காட்சி தந்தார். 

ramayanam

வானரப் படைகளில் மற்றுமொரு முக்கியமான  வீரதீர செயல்களுக்காக அறியப்பட்டவர் ஜாம்பவான். ராமர் இந்தப் பூவுலகை விட்டு செல்லும் போது, ஜாம்பவான் நீ துவாபரயுகம் முடியும் வரை பூமியில் இருப்பாய். ஒரு காரணத்தை முன்னிட்டு என்னுடன் யுத்தம் புரிந்து என்னை வந்து சேர்வாய் என்ன அருள்பாலித்தார் ஸ்ரீ ராமர். அதை மெய்யாகும் சம்பவமாக மகாபாரதத்தில் ஒரு கதை உண்டு. சத்வதனின் வம்சத்தில் தோன்றியவன் சத்ரஜித். அவன் சூரிய பகவானிடம் தவம் செய்து சியமந்தக மணியைப் பெற்று கொண்டான் அந்த மணி தினமும்  எட்டு பாரம் (எடையளவு) அளவு தங்கம் சுரந்து கொண்டேயிருக்கும். இவ்வுளவு சக்திமிக்க அந்த மணியை தன்னுடைய மாளிகையில் வைத்துக்கொள்கிறேன் என பாதுகாப்பு காரணங்களுக்காக சத்ரஜித்திடம் கூறினார் ஸ்ரீகிரூஷ்ணர்.

ஆனால் சத்ரஜித் அதை தவறாகப் புரிந்து கொண்டான். அந்த மணியை கிருஷ்ணர் அபகரிப்பதாக நினைத்துகொண்டு, தன் தம்பி பிரசேனன் என்பவனிடம்  கொடுத்தான். அந்த மணிக்கு ஒரு தன்மை உண்டு. தினசரி மணிக்குரிய பூஜை முறைகள் செய்யாமலோ, சுத்தம் இல்லாமல் இருந்தாலோ, அந்த மணி வைத்திருப்பவரை கொன்று விடும். அதனால் பிரசேனன் காட்டில் ஒரு சிங்கத்தால் கொல்லபடுகிறான். அந்த சிங்கத்தின் கழுத்தில் இருந்த மணியின் பிரகாசத்தை கண்ட அந்தவழியாக சென்ற நமது ராமாயண கால ஜாம்பவான் அந்த சிங்கத்தை கொன்று மணியை எடுத்து கொள்கிறார்.

ramayanam

இங்கே பிரசேனனை கொன்று மணியை எடுத்துகொண்டதாக கிருஷ்ணர் மேல் பழிவர, பிரசேனனை தேடி காட்டுக்கு வருகிறார் கிருஷ்ண பரமாத்மா. அங்கே பிரசேனனனையும் அருகே சிங்கமும் இறந்து கிடப்பதை காண்கிறார். அங்கே கரடியின் காலடித்தடம் இருப்பதை கண்டு அதை பின் தொடர்ந்து சென்றார். அது நேராக ஜாம்பவான் மாளிகைக்குச் கொண்டு சென்றது. சியமந்தக மணி அங்கிருப்பதை கிருஷ்ணர் கண்டார். ஜாம்பவானுக்கும் கிருஷ்ணருக்கும் சண்டை மூண்டது. சமபலம் கொண்ட இருவரும் மோதிக் கொண்டதால் 21 நாட்கள் சண்டை நடந்தது. ஜாம்பவான் மிகவும் களைப்படைந்து, தன் எதிரி சாதாரணமானவன் அல்ல; பகவானே என்றுணர்ந்து அவர் காலில் விழுந்து வணங்கினான். பின்னர் தன்னுடைய மகளையும் ஸ்ரீ கிருஷ்ணருக்கு மணம்செய்து கொடுத்தான். இப்படியாய வானர படையின் முக்கிய பிரதிநிதி ஜாம்பவானுடைய கதையும் முடிவுற்றது.  

 மகாபாரதத்திலும் வானர சேனைகளில் முக்கியமான துவிதன் மற்றும் முந்தன் இவர்களை பற்றி குறிப்பு வருகிறது. யுதிஷ்டிரர் ராஜசூய யாகம் செய்கிறார் அப்பொழுது வடக்குப் பகுதிக்கு அர்ஜுனன் தலைமையிலான சேனையை அனுப்பினார். பீமனை கிழக்குப் பகுதிக்கும் நகுலனை மேற்குப் பகுதிக்கும் படை நடத்தி செல்ல ஆணை இடுகிறார். சகாதேவன் தெற்கில் பெரும்படையுடன் சென்றான். அப்பொழுது சகாதேவன் கிஷ்கிந்தை ராஜ்யத்தை எதிர்கொள்ளுகிறான். அங்கே ராமயணக் காலத்தில் ராம ராவண யுத்தத்தில் அதிபராகிரமசாலிகளாக போரிட்ட முந்தன், துவிந்தாவுடன் வாரகணக்கில் போர் நடக்கிறது. இதில் கிஷ்கிந்தையின் குகைகளுக்குள் போர் பயங்கரமாக நடக்கிறது. சளைக்காத சகாதேவன் படை ஏழு நாட்கள் கழித்து கிஷ்கிந்தையின் அராசாட்சியை கைப்பற்றியது. அவர்கள் தருமரின் யாகத்துக்கு தங்கள் கட்டுபடுகிறோம் என அறிவித்தனர். அப்படியாக முந்தனின் ஆதிக்கமும் முடிவுற்றது

இனி வானரப்படைகளில் உள்ள முக்கியமான நபர்களில் துவிதனும் ஒருவன்.  இந்த துவிதன் அதிபராகிரமசாலி. ஆயிரம் யானைகள் பலம் கொண்டவனாம். அவன் நரகாசுரனின் நண்பனும் ஆவான். நரகாசுர வதத்துக்குப் பிறகு இந்திரனால்தான் இந்த  செயல் நடந்தது என எண்ணி முனிவர்களை கொடுமைபடுத்தி அவர்களை யாகம் செய்ய விடாமல் துன்புறுத்தினான். அங்கே இருக்கிற மக்களுக்கும் முனிவர்களுக்கும் தொல்லை கொடுத்து வந்தான். அவன் மிகப்பெரிய உருவம் எடுக்கும் பராகிரமசாலி என்பதால் பெரிய உருவம் எடுத்து பயிர்களை எல்லாம் சேதம் செய்தான்.

அப்படி இருக்கையில் ஒரு நாள் பலராமர் ரைவதம் என்ற மலையிலுள்ள வனத்தில் கக்குத்மி அரசனின் மகளும் பலராமரின் மனைவியும் ஆகிய ரேவதி மற்றும் பணிப்பெண்களுடன்  ஓய்வெடுக்க  வந்த நேரத்தில் அங்கே இருக்கும் இளம்பெண்களிடம் முறைகேடாக நடந்து கொண்டான் துவிதன். மேலும் அவன் பலராமருக்கு இடைஞ்சல் செய்து சண்டைக்கு அழைத்தான் .அதில் கோபம்கொண்ட பலராமர் தன முஷ்டியினால் குரங்கின் தலையில் ஓங்கி அடித்து கொன்றார். பின்னர் அவனுக்கு காட்சி கொடுத்து அவனுக்கு விமோசனம் கொடுத்தார். அப்படியாக துவிதனின் கதையும் முடிந்தது. 

இப்படியாக திரேதா யுகத்தில் இருந்து துவாபர யுகம் வரை வானரப் படைகளின் சாம்ராஜ்யம் தொடர்ந்தது. பூமி உள்ள காலம்வரை இருப்பீர்கள் என ஸ்ரீ ராமரால் ஆசிர்வதிக்கப்பட்ட சில பராக்கிரமம் மிக்க வானர முக்கியத்துவம் பெற்றவர்கள் இந்த கலியுகத்திலும் நம்மை சுற்றி இருகிறார்களா என்றால் .அதற்கும் ஒரு விடை உள்ளது. 

ramayanam

இமயமலைக்கு யாத்திரை செய்த ஒரு பக்தர் வழிதவறி ஒரு குகைக்குள் சென்றுவிட்டதாகவும், அங்கே  சாட்சாத் அனுமன் திவ்ய சொருபத்துடன் இருந்ததையும் கண்டாராம். உடனே அவர் மலையில் இருந்து இறங்கிவந்து நண்பர்களுடனும் மனைவியுடனும் தான் அனுமனை தரிசித்ததாகவும் அவர் தன்னை ஆசிர்வதித்ததையும் கூறினாராம். அன்று இரவு தூங்கப்போனவர் மிகுந்த சந்தோஷமாக இருந்தாராம். அதன் பிறகு அவர் காலையில் எழவே இல்லை. இறந்துவிட்டார் என பத்திரிகைகளிலும் டிவிகளிலும் சொல்லப்பட்டது.