ராமாயணத்தில் லாஜிக் இல்லை என்ற மிஷ்கின்… கொந்தளித்த எச்.ராஜா!

 

ராமாயணத்தில் லாஜிக் இல்லை என்ற மிஷ்கின்… கொந்தளித்த எச்.ராஜா!

சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்று பலரும் விமர்சித்துவரும் சூழலில், ராமாயணத்தில் கூட லாஜிக் இல்லை என்று மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.

சைக்கோ படத்தில் லாஜிக் இல்லை என்று பலரும் விமர்சித்துவரும் சூழலில், ராமாயணத்தில் கூட லாஜிக் இல்லை என்று மிஷ்கின் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
மிஷ்கின் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், அதிதி ராவ் உள்ளிட்டவர்கள் நடித்த சைக்கோ படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. வசூல் ரீதியாக விமர்சனங்கள் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால், கதை, திரைக்கதையில் லாஜிக் இல்லை என்று விமர்சனம் எழுந்துள்ளது. இதற்கு வால்டர் பட இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் மிஷ்கின் அளித்த பதில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

psycho-movie

விழாவில் பேசுகையில், “‘சைக்கோ’ படத்தில் லாஜிக் பற்றி பலரும் பேசியதால் மிரண்டுப் போய் உள்ளேன். ஒரே ஒரு விஷயம்… ராமாயணத்தில் மோசமானவர் ராவணன். தன் மனைவியைத் தூக்கிக் கொண்டு போனதால் ராவணனிடம் போய் ராமன் சண்டை போட்டான். ராமனின் பொண்டாட்டியைத் தூக்கி வந்துவிட்டு, நியாயம் இருக்கிறது என்று ராவணன் சண்டை போடுகிறான். அதில் லாஜிக்கே இல்லை. கும்பகர்ணன் வந்து ராவணன் எனக்குச் சாப்பாடு போட்டார் என்று அவருக்கு ஆதரவாகச் சண்டை போடுகிறேன் என்கிறார் அதில் எந்தவொரு லாஜிக்குமே இல்லை. போரில் ராவணனிடம் இருந்த அத்தனை ஆயுதங்களும் தீர்ந்து போகின்றன. அப்போது ராமன்  ‘இன்று போய் நாளை வா’ என்று சொல்கிறான். அதிலும் லாஜிக் இல்லை” என்று குறிப்பிட்டார்.

இதற்கு எச்.ராஜா கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பான தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில், “இராமாயணத்தை இழிவாகப் பேசிய சைக்கோ சினிமா இயக்குனர் மிஷ்கினின் செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்து மதத்தின் மீது மாற்று மதத்தினர் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதை நாம் இனியும் அனுமதிக்கக் கூடாது. சரியான எதிர்வினையாற்ற வேண்டும்” என்று கூறியுள்ளார்.
மிஷ்கினின் இயற்பெயர் சண்முக ராஜா. அவர் எந்த மதத்தைச் சார்ந்தவர் என்பது யாருக்கும் தெரியாது. மிஷ்கின் என்பது சினிமாவுக்காக வைத்த பெயர். எதுவும் தெரியாமல் மாற்ற மதத்தினர் என்று எச்.ராஜா விமர்சனம் செய்திருப்பது நகைப்பை ஏற்படுத்தியுள்ளது.