ராமலிங்கம் கொலை: அமெரிக்க உளவுத்துறை சொன்ன மதக்கலவரம் தமிழகத்திலா?

 

ராமலிங்கம் கொலை: அமெரிக்க உளவுத்துறை சொன்ன மதக்கலவரம் தமிழகத்திலா?

திருபுவனத்தை சேர்ந்த பாமக பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. லோக் சபா தேர்தலுக்கு முன்பு இந்தியாவில் மாபெரும் மதக்கலவரம் வெடிக்கும் என தேசிய புலனாய்வுத்துறை இயக்குனர் டான் கோட்டிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

திருபுவனத்தை சேர்ந்த பாமக பொறுப்பாளர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகத்தில் அச்சமான சூழலை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் அமெரிக்க உளவுத்துறை ஒரு அறிக்கை வெளியிட்டது. லோக் சபா தேர்தலுக்கு முன்பு இந்தியாவில் மாபெரும் மதக்கலவரம் வெடிக்கும் என தேசிய புலனாய்வுத்துறை இயக்குனர் டான் கோட்டிடம் சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கை வெளியானது அரசியல் தலைவர்கள் மற்றும் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில் பாமக பொறுப்பாளர் ராமலிங்கம் மத மாற்றத்தை தடுத்ததற்காக கொலை செய்யப்பட்டதாக கூறப்படும் வழக்கு தீவிரமடைந்து இருக்கிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு, ராமலிங்கம் ஒரு இஸ்லாமியரிடம் விவாதம் செய்யும் காணொளி வெளியானது. அதில் ராமலிங்கம் அந்த இஸ்லாமியரிடம், நீங்கள் பிரிவினையை ஏற்படுத்தி மதமாற்றம் செய்கிறீர்கள் என வாக்குவாதத்தில் ஈடுபடுவார். பின்னர் அந்த இஸ்லாமியரின் குல்லாவை புடுங்கி அணிந்துகொண்டு, திருநீரை இஸ்லாமியர் நெற்றியில் பூசிவிடுவார். இந்தக் காட்சியை புகைப்படம் எடுக்கும்படியும் கூறுவார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இந்நிலையில் ராமலிங்கம் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அரசியல் தலைவர்கள் அனைவரும் ராமலிங்கம் கொலைக்கு கண்டணங்களை பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கு தொடர்பாக சர்புதீன், நிஜாமுதீன், அசாருதீன், ரிஸ்வான், முகமதுரியாஸ் ஆகிய 5 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகிறார்கள். ராமலிங்கம் மத மாற்றத்தை கண்டித்ததாலேயே இந்த சம்பவம் நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. ராமலிங்கம் இஸ்லாமியரை கண்டித்தது ஒரு முஸ்லீம் தெருவில், அங்கே ராமலிங்கம் எப்படி வந்தார் என்பது குறித்து காவல்துறை அறிக்கை வெளியிட வேண்டும் என இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் தலைவர் கே.எம். காதர் மொய்தீன் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் சாதி, மதப் பிரச்சனைகள் நீண்ட காலமாக வேரூன்றி நிற்கிறது. அவரவர் தங்களுக்கு பிடித்த மதத்தை பின்பற்றலாம், பிடித்த கடவுளை வணங்கலாம். ஆனால் மதத்தின் பெயரால் சக மனிதனை ஒடுக்குவது மிக மோசமான மனநிலை. எனினும் மதக் கொள்கைகளை பரப்பும் செயலை அனைத்து மதத்தவரும் தவறாமல் செய்து வருகின்றனர். ராமலிங்கம் கொலை செய்யப்பட்டது மிகவும் வருந்தத்தக்க சம்பவம், அவருக்கு நீதி கிடைத்தே ஆக வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் ராமலிங்கத்தின் பெயரால் இங்கே மதக்கலவரம் நிகழ்வதற்கான சாத்தியக் கூறுகள் அதிகமாய் இருக்கிறது. பாஜகவினர் மதக்கலவரத்தை தூண்ட ராமலிங்கம் கொலையான சம்பவத்தை பயன்படுத்த வாய்ப்புள்ளதாக சமூக ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே அமெரிக்க உளவுத்துறையின் அறிக்கையில், தேர்தலை முன்னிட்டு பாஜக இந்து தேசியவாதிகளுக்கு அழுத்தம் கொடுத்து மதக் கலவரத்தை தூண்ட வாய்ப்புள்ளதாக கூறியிருப்பது நினைவில் கொள்ள வேண்டியது.

aeragg

இதனிடையே பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா, மதக்கலவரத்தை தூண்டும் விதமாய் இஸ்லாமிய வெறுப்புடன் டிவிட் செய்து வருகிறார். பாஜக இந்துக்களின் கட்சி இல்லை, சிறுபான்மையினருக்கமான கட்சி என பரப்புரை மட்டும் செய்யப்படுகிறது. அப்படி அனைத்து மக்கள் மீதும் அக்கறை கொண்ட கட்சியாக இருப்பின், ராமலிங்கம் கொலைக்கு நீதி கேட்பது மட்டுமே சரியானதாக இருக்கும். ஆனால் எச். ராஜா, இந்துக்களே உஷார், இந்துக்களே ஏமாறாதீர்கள், முஸ்லிம் பயங்கவராதிகள் என பதிவு செய்து வருகிறார். இது மதப் பிரச்சனையால் நடந்த கொலையா என்பது பற்றி உறுதியாக தெரியாதபோது இவ்வாறு பதிவு செய்கிறார். அமெரிக்க உளவுத்துறை சொன்ன மதக்கலவரம், தமிழகம் மற்றும் உத்தரப் பிரதேச பகுதியில் நடக்க அதிக வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனவே தமிழக மக்கள் தங்களால் இயன்ற அளவு மதக்கலவரம் நிகழ்வதை தவிர்க்க பொறுமையாய் செயல்படுவது அவசியம் என சாதி, மத எதிர்ப்பாளர்கள் பதிவு செய்து வருகின்றனர்.