ராமர், சீதை படங்களுடன் அனுமதியின்றி ஆன்மிக பேரணி: பாஜகவினர் கைது!

 

ராமர், சீதை படங்களுடன் அனுமதியின்றி ஆன்மிக பேரணி: பாஜகவினர் கைது!

ரஜினிகாந்த், கற்பனையாக எதுவும்  நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டது என பலரும் உறுதி செய்துள்ளனர்.

துக்ளக் பத்திரிகையின் 50- வது ஆண்டு விழாவில் ரஜினி பெரியார் குறித்து பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு கடுமையான எதிர்ப்பு கிளம்பியது. இதுகுறித்து  விளக்கமளித்த ரஜினிகாந்த், கற்பனையாக எதுவும்  நான் கூறவில்லை. ராமர், சீதை சிலைகள் நிர்வாணமாகக் கொண்டுசெல்லப்பட்டது என பலரும் உறுதி செய்துள்ளனர்.  பத்திரிகைகளில் வந்ததை தான் நான்  கூறினேன். அதற்காக மன்னிப்பு கேட்க முடியாது’ என்றார்.  இது கூடுதல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் தினமும் சமூக வலைதளங்களில் ரஜினி பந்தாடப்படுகிறார்.

tn

இந்நிலையில் 1971-ஆம் ஆண்டு ஜனவரி 24-ஆம் தேதி செவ்வாய்பேட்டையில் திராவிடக் கழக பேரணி நடந்த பகுதியில் அதே நாளான இன்று பாஜகவினர் பேரணி செல்ல முயன்றனர். அப்போது போலீசாருக்கும் பாஜகவினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதில் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து அனுமதியின்றி பேரணி நடத்தியதாக பாஜகவினர் 50ற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.  

ttn

இந்த சம்பவம் நடந்து 49 வருடங்கள் ஆகும் நிலையில் ரஜினி என்ற ஒற்றை மனிதரின் புரிதலின்மையால் பேசிய வார்த்தை சமூகத்தில் அமைதியை குலைக்கும் வகையில் முன்வந்து நிற்பதாக பலரும் கருத்து  தெரிவித்து வருகிறார்கள்.