ராமர் கோவில் யார் கைக்குப் போகும் : காவி அமைப்புகளுக்குள் கலவரம் ஆரம்பம்!.

 

ராமர் கோவில் யார் கைக்குப் போகும் : காவி அமைப்புகளுக்குள் கலவரம் ஆரம்பம்!.

பாப்ரி மஸ்ஜித் இடம்,இந்துக்களுக்கா,இஸ்லாமியருக்கா என்கிற வழக்கு முடிந்து,அதை கைப்பற்றுவது யார் என்கிற போட்டி சூடுபிடித்து இருக்கிறது.

பாப்ரி மஸ்ஜித் இடம்,இந்துக்களுக்கா,இஸ்லாமியருக்கா என்கிற வழக்கு முடிந்து,அதை கைப்பற்றுவது யார் என்கிற போட்டி சூடுபிடித்து இருக்கிறது.தாற்காலிக ராமர் கோவில் பூசாரியான ஆச்சார்ய சத்யேந்திரதாஸ்,ராமர் கோவில் கட்டுவதாகச்சொல்லி ஒரு அமைப்பு நீண்டகாலமாக காசு பார்த்து வருகிறது. அவர்கள் கைக்கு இந்த கோவில் போய்விடக்கூடாது.

Ayodhya

ஜம்முவில் இருக்கும் வைஷ்ணவ தேவி ஆலயத்தில் உள்ளது போல ஒரு தனி அறக்கட்டளை அமைக்கப்பட வேண்டும் என்கிறார்.விஷ்வஹிந்து பரிஷத்தோ,நாங்கள் கட்டுமான பணிக்காக செய்து வைத்திருக்கும் தளவாடங்களைக் கொண்டு முதல் தளத்தை உடனடியாக நிறுவுவோம் எங்களிடம்தான் பொறுப்பை தரவேண்டும் என்கிறது.

Hindu parishath

ராமாலயா அறக்கட்டளையின் அவ்முக்தேஸ்வரானந்தாவோ,எங்கள் அறக்கட்டளை அன்றைய பிரதமர் நரசிம்மராவின் ஆலோசனையின் பேரில் அமைக்கப்பட்டது.இந்தியாவின் நான்கு சங்கராச்சாரிகளுமே இதில் உறுப்பினராக இருக்கிறார்கள். ஆகவே,பழம் எங்களுக்குத்தான் என்கிறார்.

Ramar temple

ஸ்ரீராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் ஸ்ரீநித்திய கோபாலதாசோ , புதிதாக ஒரு அறக்கட்டளை அமைத்தால் அரசுக்கு பணமும் அதிகாரிகள் உழைப்பும் வீனாகும்.எங்களிடமே ஒப்படையுங்கள்,பிரதமர் மோடி,உ.பி முதல்வர் ஆதித்யநாத் பதவிக் காலத்திலேயே திறந்து விடலாம்.எங்கள் அறக்கட்டளையே போதுமானது என்கிறார்.

உச்சநீதிமன்றம் இன்னும் மூன்று மாதத்தில் அறக்கட்டளை அமைக்க வேண்டும்.என்று சொல்லியிருக்கும் நிலையில் அயோத்தி சாதுக்களிடையே ஏற்பட்டு இருக்கும் இந்த மோதலால் இப்போதும்,அயோத்தி பிரட்சினையை சூடாகவே இருக்கிறது.