ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-1

 

ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-1

இந்தியாவில் பிஜேபியை இன்னும் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்று சொல்லுவோர் தாவூத் இப்ராஹிம் குண்டுகள் வைத்து ஆயிரம் பேரை கொன்றதை கண்டித்தது கிடையாது.

மிகவும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பு வழங்கியது. சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில் கட்டலாம் என அளிக்கப்பட்ட தீர்ப்பை நாடு முழுவதும் மக்கள் ஏகமனதாக ஏற்றுக் கொண்டனர். தீர்ப்பை வரவேற்று எந்த அமைப்பும் யாரும் கொண்டாட்டங்களில் ஈடுபடவில்லை.

ayodhya

தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து யாரும் சோகத்தையும் வெளிபடுத்தவில்லை. அமைதியை கடைப்பிடித்து ‘இதுதான் இந்தியா’ என்பதை உலகுக்கு மக்கள் பெருமையுடன் காட்டியுள்ளனர்.-மிக மிக நல்ல செய்தி. இந்தியர்கள் அனைவரும் பெருமைப்பட வேண்டிய தருணம் இது. பாபர் மசூதி இடிப்பு இந்திய மதசார்பின்மை தத்துவம் எனும் பட்டு வேஷ்டியில் ஒரு கரும் புள்ளி தான்.

இந்தியாவின் மதசகிப்புத்தன்மையின் நம்பக தன்மை மீது விழுந்த இடி. இதற்கு மாற்று கருத்து இல்லை. அதேபோல பாபர் மசூதி இடிப்புக்கு பழிக்குப்பழி என்று மும்பையில் குண்டு வெடிப்புகள் நடந்ததும் முஸ்லீம் மதசகிப்புத்தன்மையின் மீது விழுந்த கரும் புள்ளி தான்.hindu

மதசார்பின்மை இந்தியாவில் இனி அயோத்தி தந்த தீர்ப்புக்கு பின்பு, பாப்ரி மசூதி இடிப்பை சொல்லி ஹிந்து நம்பிக்கைகளை குறை கூறுவது அல்லது பிஜேபியை இளிவரல்கள் செய்வது இனி இருக்காது. பாபர் மசூதி இடிப்பு மிக மிக தவறு தான். அதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், அந்த தவறை மட்டும் சுட்டி காட்டி இந்தியாவில் பிஜேபியை இன்னும் மதக்கலவரத்தை தூண்டுகிறது என்று சொல்லுவோர் தாவூத் இப்ராஹிம் குண்டுகள் வைத்து ஆயிரம் பேரை கொன்றதை கண்டித்தது கிடையாது. 

-கருப்பண்

தொடரும்…