ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-4

 

ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-4

ஐஸ்ஐஸ் அமைப்பின் ஆட்சி முறையில் பத்து வருடங்கள் என இந்தியா பாகிஸ்தானைவிட மிக பயங்கரவாத நாடாக மாறியிருக்கும்.

இந்தியா கி பி 1947 இல் சுதந்திரம் பெற்ற போது முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக ( ஹிந்துக்களின் எண்ணிக்கையில் ) மற்றும் ஹிந்துக்கள் சிறுபான்மையினராக ( முஸ்லிம்கள் எண்ணிக்கையில் )ஒரு வேளை இருந்திருந்தால் இந்தியா இது போன்ற மதசார்பின்மை நாடாக கி.பி 2019 ம் ஆண்டுவரை இருந்திருக்குமா? இல்லையே பாகிஸ்தான் போன்று பழமை- மதவாத இஸ்லாம் நாடாக இந்தியா மாறியிருக்கும். 

 தாலிபான் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள், அல் கொய்தா அமைப்பின் ஆட்சிமுறையில் பத்து வருடங்கள் லஷ்கர்- இ -தொய்பா ஆட்சிமுறையில் பத்து வருடங்கள், மற்றும் ஐஸ்ஐஸ் அமைப்பின் ஆட்சி முறையில் பத்து வருடங்கள் என இந்தியா பாகிஸ்தானைவிட மிக பயங்கரவாத நாடாக மாறியிருக்கும். 

secularism

அல் கொய்தா தீவிரவாதிகள் ஆப்கானிஸ்தானில் 1700 வருடங்கள் பழமையான முன்னூறு அடிகள் உயரமான பௌத்தர் சிலையை பீரங்கிகள் கொண்டு சில்லு சில்லாக உடைத்ததை ஹிந்துக்கள் அறிவார்கள். பாகிஸ்தான் பிரதமர் பூட்டோ தூக்கில் இடப்பட்டு ராணுவ ஆட்சி வந்ததை – ஜியா -உல் -ஹக் ராணுவ ஆட்சி வந்தது மற்றும் பெனாசீர் பூட்டோவை சிறையில் அடைத்து ராணுவ தளபதி முஷாரப் ஆட்சிக்கு வந்ததையும் நாங்கள் அறிவோம்.

பாகிஸ்தானில் கி.பி 1947 ம் ஆண்டுக்கு பிறகு ஏராளமான ஹிந்து கோவில்களும், கிருஸ்துவ சர்ச்சுகளும் இடித்து தரைமட்டமாக்கப்பட்டது. அந்த இடங்களில் மசூதிகள் கட்டப்பட்டது என்பதுதான் உலகம் அறிந்த வரலாறு. பாகிஸ்தானில் கராச்சியில் குண்டு வெடிப்பு, பெஷாவரில் குண்டு வெடிப்பு என்று செய்தி வராத நாட்கள் குறைவு. ஆனால் இந்தியா அமைதி பூங்காவாக உள்ளது.

 ayodhya

இந்தியாவில், இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு சிறுபான்மை முஸ்லிம்கள் எத்தனையோ இடங்களில் தர்காக்களும், மசூதிகளும் கட்டியுள்ளனர். அதை போன்று இந்தியா முஸ்லீம் நாடாக இருந்திருந்தால் அதே எண்ணிக்கையில் சிறுபான்மை ஹிந்துக்கள் கோவில்கள், சிறுபான்மை கிருஸ்துவர்கள் சர்ச்சுகள் கட்டியிருக்க முடியுமா ?

-கருப்பண்

முற்றும்…