ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-3

 

ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-3

ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள். காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை, மத சகிப்பு தன்மை.

 பிஜேபி மதவாத கட்சி. கேட்டால் ஹிந்துத்வாவை அது ஆதரிக்கிறது என வெற்று கூச்சல் தான் வரும். ஆனால் உண்மை, நிதர்சனம் என்னவென்றால் பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் ஆம்.பிஜேபிக்கு மட்டும் ஹிந்துக்கள் ஓட்டு போட வேண்டும் என ஒரு தேர்தலில் ஹிந்துக்கள் முடிவெடுத்தாலே போதும். இந்தியாவில் அடுத்த 100 ஆண்டுகளுக்கு பிஜேபி மட்டுமே மத்தியிலும், மாநிலங்களிலும் ஆட்சியில் இருக்கும்.ayodhya

ஆனால் ஹிந்துக்கள் அப்படி செய்தது இல்லை. இனியும் செய்ய மாட்டார்கள். காரணம் ஹிந்துக்களின் மத சார்பின்மை, மத சகிப்பு தன்மை. அப்துல் கலாமை இந்திய நாட்டின் ஜனாதிபதியாய் அழகு பார்த்தது பிஜேபி வாஜ்பாய் அரசு தான். பாகிஸ்தான் நாட்டில் சிறுபான்மை ஹிந்து ஜனாதிபதியாக ஆக முடியாது. அப்படி இருந்தும் பிஜேபி மதவாத கட்சி. பிஜேபி கட்சியில் அனைத்து மதத்தவர் இருந்தாலும் அது மதவாத கட்சி மற்றும் வகுப்பு வாத கட்சி. ஆனால் முஸ்லிம் லீக் ,மனித நேய மக்கள் கட்சி ,கிருஸ்துவ ஜனநாயக முன்னணி ஆகிய ஒரே ஒரு மதத்தினர் மட்டும் உள்ள கட்சிகள் மத சார்பற்ற கட்சிகளா? என்ன கொடுமை இது?religious

கன்னியாகுமரி மாவட்டத்தில் கிருஸ்துவ சர்சுகள், கிருஸ்துவ திருச்சபைகள், பேராயர்கள் மூலமாகவும் மற்றும் தமிழகமெங்கும் முஸ்லிம் ஜமாத் மூலமாகவும் ஒட்டு மொத்த சிறுபான்மை மக்களின் ஓட்டுக்களை திமுக அள்ளினாலும் அது மத சார்பின்மை கட்சி. ஆம் அக்மார்க் மத சார்பின்மை கட்சி. இது தான் காலத்தின் கொடுமை. 

-கருப்பண்
தொடரும்…