ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-2

 

ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-2

இந்தியா ஒரு வேளை முஸ்லீம் நாடாக ஒரு சிரியா அல்லது ஈராக் போன்று கடந்த அறுபது வருடங்கள் இருந்திருந்தால் சிறுபான்மை ஹிந்துக்கள் கதி என்னவாக இருந்திருக்கும்?

சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமா பட டைரக்டர் அமீர் இதை போன்றதொரு கருத்தை ஒரு முஸ்லீம் கூட்டத்தில் வலியுறுத்தி பேசினார். ’’பாபர் மசூதி இடிப்பு கி பி 1992 இல் நடந்தது. அது நடந்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது .இந்த 25ஆண்டுகளில் முஸ்லிம்கள் இந்தியாவெங்கும் கட்டிய மசூதிகளுக்கு பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆம் பாபர் மசூதி என பெயர் சூட்டியிருந்தாலே ஆயிரக்கணக்கான பாபர் மசூதிகள் வந்திருக்கும்’’ என்றார்.

ayodhya

யோசித்து பாருங்கள் ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அனைவரும் ஹிந்துக்களே. இந்திய முஸ்லிம்களின் மூதாதையர் ஹிந்துக்கள் தான். இதை யாரும் மறுக்கவோ, மாற்றவோ முடியாது. ஏதோ பாப்ரி மசூதி இடிப்பு காரணமாக முஸ்லிம்கள் சிறுமைப்படுத்தப்பட்டார்கள் என்று கூறுவது தவறு. உதாரணத்திற்கு, இந்தியா ஒரு வேளை முஸ்லீம் நாடாக ஒரு சிரியா அல்லது ஈராக் போன்று கடந்த அறுபது வருடங்கள் இருந்திருந்தால் சிறுபான்மை ஹிந்துக்கள் கதி என்னவாக இருந்திருக்கும்?freedom

இந்தியாவில் ஹிந்து கோவில்களும் கிருஸ்துவ சர்ச்சுகளும் ஒன்றாவது இன்று மிஞ்சிருக்குமா? நினைக்கவே பயமாக உள்ளது. இங்கு முஸ்லிம்கள் பெரும்பான்மை மக்களுக்கு நிகராக நடத்தப்படுகிறார்கள். பல முஸ்லீம் நாடுகளில் முஸ்லீம் பெண்களுக்கு ஓட்டுரிமை, படிப்புரிமை மதத்தின் பேரால் தடுக்கப்பட்ட நிலையில் இந்தியாவில் அத்தகைய கொடுமைகள் இன்றி, முஸ்லீம் பெண்கள் அனைத்து உரிமைகள் பெற்று வாழ்கின்றனர். ஆதலால் தான் முத்தலாக் முறையை ஒழிக்க மோடி சட்டமியற்றினார். பிரதமர் மோடி 2016 வருடம் ஜூன் மாதம் முஸ்லீம் நாடான ஆப்கானிஸ்தானில் 1600 கோடிகள் செலவில் கட்டப்பட்ட சல்மா அணை /சமாதான அணை திறந்து வைத்தார். 

அதன் பக்கத்து முஸ்லீம் நாடு பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானுக்கு குண்டுகள் வைக்க தீவிரவாதிகளை அனுப்புகிறது. 

-கருப்பண்

தொடரும்…

ராமபக்தியோ… ரஹீம் பக்தியோ… இதுதான் இந்தியா..! திருந்துங்கள் மத வெறியர்களே…-1  https://www.toptamilnews.com/india-religious-fanatics