ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு ; அதிமுக தலைமை அழுத்தம்?!..

 

ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு ; அதிமுக தலைமை அழுத்தம்?!..

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க சொல்லி அதிமுக தலைமை பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது!..

தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்திக்க சொல்லி அதிமுக தலைமை பாமக நிறுவனர் ராமதாஸ்க்கு அழுத்தம் கொடுத்திருக்கிறது!..

அதிமுக கூட்டணியில் உள்ள பாமகவுக்கு தேமுதிக உடன் கூட்டணி அமைப்பதில் அதிருப்தி இருந்து வந்தது. ஜெயலலிதா இருந்த போது தேமுதிகவும் பாமகவும் கூட்டணி அமைத்திருந்தாலும், ராமதாஸ் – விஜயகாந்த் சந்திப்பு நிகழவில்லை. ஆனால் இன்று அவர்கள் இருவரும் சந்தித்துக்கொள்ள இருக்கின்றனர். சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற இருக்கிறது.

ராம்தாஸ்

2014-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் இந்த இரு கட்சிகளும் கூட்டணியாய் இருந்தது. அப்போது தேமுதிக நல்ல முன்னிலையில் இருந்தது, பாமகவை விட அதிக சீட்டுகள் தேமுதிகவுக்கு வழங்கப்பட்டது. ஆனால் விஜயகாந்த் சுருசுருப்பாய் இல்லாத இந்த சூழலில், தேமுதிகவுக்கு பாமகவை விட குறைவான தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் இந்தத் தேர்தலில் இணைந்து வெற்றிபெற்றே தீர வேண்டும் என்பதால், அதிருப்தி ஏதுமின்றி சுமுகமாய் செல்ல வேண்டும் என அதிமுக தலைமை கேட்டுக் கொண்டிருக்கிறது. இதனால்தான் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து விசாரிக்க ராமதாஸ் செல்கிறாராம், இந்த சந்திப்பில் இரு தரப்பும் இணைந்து பணியாற்றுவது பற்றி விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.