ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வெளியிடுவதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு

 

ராதாபுரம் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவை வெளியிடுவதற்கான இடைக்கால தடை நீட்டிப்பு

ராதா புரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார்.

ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி பெற்றார். இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக, திமுக வேட்பாளர் அப்பாவு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அந்தத் தொகுதியில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தும் படி உத்தரவிட்டது. அதன் படி, கடந்த 4 ஆம் தேதி சென்னை உயர்நீதி மன்றத்தில் ராதாபுரம் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. அதனை எதிர்த்த அதிமுக வேட்பாளர் இன்பதுரை உச்சநீதிமன்றத்தில் மறுவாக்கு எண்ணிக்கையைத் தடை செய்யக் கோரி மனுத் தாக்கல் செய்தார்.

Radhapuram

அந்த மனுவை விசாரித்த, உச்சநீதி மன்ற நீதிபதி அருண் மித்ரா, உயர்நீதி மன்றத்தில் நடைபெற்று வரும் மறுவாக்கு எண்ணிக்கையின் முடிவுகளை வெளியிட வரும் அக்டோபர் 23 ஆம் தேதி வரை இடைக் கால தடை விதித்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து, அந்த வழக்கு இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அதில், ராதாபுரம் தொகுதிக்கான மறுவாக்கு எண்ணிக்கைக்கு விதித்த இடைக்காலத் தடையை நவம்பர் 13 ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதி மன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.