ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு 26 அலுவலர்கள் வரவழைப்பு…

 

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கைக்கு 26 அலுவலர்கள் வரவழைப்பு…

தபால் மற்றும் மின்னணு வாக்குகளை எண்ண 24 அலுவலர்கள், 1 தேர்தல் அலுவலர், 1 துணை தேர்தல் அலுவலர் என 26 அலுவலர்கள் உயர்நீதி மன்றத்திற்கு வந்தடைந்துள்ளனர்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக, திமுக வேட்பாளர் அப்பாவு மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மனு அளித்திருந்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தும் படி உத்தரவிட்டது. 

அதிமுக வேட்பாளர் இன்பதுரை மறு வாக்கு எண்ணிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்று அளித்த மனுவை நேற்று உயர் நீதி மன்றம் நிராகரித்து இன்று வாக்கு எண்ணிக்கை எந்த தடையும் இன்றி நடத்தப்படும் என்று உத்தரவிட்டது.

Postal votes

அதன் படி, தபால் மற்றும் மின்னணு வாக்குகளை எண்ண 24 அலுவலர்கள், 1 தேர்தல் அலுவலர், 1 துணை தேர்தல் அலுவலர் என 26 அலுவலர்கள் உயர்நீதி மன்றத்திற்கு வந்தடைந்துள்ளனர். மேலும், தபால் வாக்குகளும் மின்னணு இயந்திரங்களும் பத்திரமாகப் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் சென்னை உயர்நீதி மன்றத்திற்குக் கொண்டு வரப் பட்டுள்ளன. 

Officers

ராதாபுரம் வாக்கு எண்ணிக்கைகள் துவங்க உள்ள நிலையில், அதிமுக வேட்பாளர் பதவி நீடிக்குமா அல்லது திமுக வேட்பாளருக்கு சாதகமாக முடிவு வருமா எனப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.