ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: உயர்நீதி மன்றம் உத்தரவு!

 

ராதாபுரம் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும்: உயர்நீதி மன்றம் உத்தரவு!

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார்.

திருநெல்வேலி மாவட்டம், ராதாபுரம் தொகுதியில் கடந்த 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்ட மன்ற தேர்தலில், அதிமுக வேட்பாளர் இன்பதுரை 49 வாக்கு எண்ணிக்கையில் வெற்றி பெற்றார். இன்பதுரையின் வெற்றிக்கு எதிராக, திமுக வேட்பாளர் அப்பாவு, தேர்தல் அதிகாரிகள் தபால் வாக்குகளை எண்ணவில்லை, அதனால் மீண்டும் தபால் வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு அளித்திருந்தார். 

DMK Member Appavu

அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்தும் படி உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அதிமுக வேட்பாளர் இன்பதுரை மறு வாக்கு எண்ணிக்கையைத் தடை செய்ய வேண்டும் என்று உயர்நீதி மன்றத்தில் மனு அளித்தார். 

High court

இன்பதுரையின் மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், அவரின் மனுவைத் தள்ளுபடி செய்தது. மேலும், அப்பாவு அளித்த வழக்கின் தீர்ப்பை வைத்து நாளை காலை 11:30 மணிக்கு ராதாபுரம் தொகுதிக்கான மறு வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று உத்தரவிட்டுள்ளது.