ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

 

ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி பிரதமர் மோடி தீபாவளி கொண்டாட்டம்

ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்

கேதார்நாத்: ராணுவ வீரர்களுக்கு இனிப்புகள் ஊட்டி பிரதமர் மோடி தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

பிரதமராக மோடி பதவியேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும், ராணுவ வீரர்களுடன் இணைந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடி வருகிறார். அந்த வகையில், 2014-ஆம் ஆண்டு சியாச்சின் சென்ற மோடி, அங்கு ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். 2015-ஆம் ஆண்டில் பஞ்சாப் மாநிலத்திலும், 2016-ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்திலும், கடந்த 2017-ஆம் ஆண்டு ஜம்மு-காஷ்மீர் எல்லைப் பகுதியான குரேஸ் துறை பகுதியிலும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார்.

இந்நிலையில், வடமாநிலங்களில் இன்று கொண்டாடப்படும் தீபாவளி பண்டிகையையொட்டி, உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத் சென்ற பிரதமர் மோடி ஹர்சில் ராணுவ முகாமில் இந்தோ -திபெத்திய எல்லை படையினர் மற்றும் ராணுவ வீரர்களுடன் தீபாவளி பண்டிகையை கொண்டாடினார். அப்போது வீரர்களுக்கு இனிப்பு வழங்கி பிரதமர் மோடி மகிழ்ந்தார். அப்போது பேசிய அவர், ராணுவ வீரர்களால், மக்களின் எதிர்காலம் பாதுகாக்கப்பட்டு உள்ளதாக கூறினார்.

முன்னதாக கேதார்நாத் சென்ற பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர், பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோயிலில் பிரதமர் மோடி வழிபாடு நடத்தினார்.