ராணுவ தர பாதுகாப்புடன் கூடிய எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம்

 

ராணுவ தர பாதுகாப்புடன் கூடிய எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம்

எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சியோல்: எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போன் ராணுவ தர பாதுகாப்புடன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

தென்கொரிய நிறுவனமான எல்.ஜியின் தனது புதிய ஆண்ட்ராய்டு ஒன் ஸ்மார்ட்போன் கொரியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய ஸ்மார்ட்போன் எல்.ஜி க்யூ9 ஒன் ஆகும். முன்னதாக இதே ஸ்மார்ட்போன் எல்.ஜி ஜி7 ஒன் என்ற பெயரில் கடந்தாண்டு ஆகஸ்டு மாதம் ஐ.எஃப்.ஏ. விழாவில் அறிமுகம் செய்யப்பட்டது. எல்.ஜி. ஜி7 ஒன் ஸ்மார்ட்போனில் பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன் வழங்கப்பட்டிருந்தது. அதேபோல் இந்த எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போனிலும் அளிக்கப்பட்டுள்ளது.

எல்.ஜி க்யூ9 ஒன் ஸ்மார்ட்போன் மொராக்கன் புளு நிறத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் விலை 599,500 கொரியன் வொன், அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.37,940 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட்போனில் வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி வழங்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி எல்.ஜி க்யூ9 ஒன் சிறப்பம்சங்கள் வரிசையில் 6.1 இன்ச் ஃபுல் விஷன் சூப்பர் பிரைட் IPS டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளம், 16 எம்.பி பிரைமரி கேமரா, டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், பிரத்யேக கூகுள் அசிஸ்டண்ட் பட்டன், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 3.5 எம்.எம் ஆடியோ ஜாக், பூம்பாக்ஸ் ஸ்பீக்கர், எஃப்.எம் ரேடியோ, 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3000 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குயிக் சார்ஜ் 3.0 ஆகியவை இடம்பெற்றுள்ளன.