ராணுவத்தில் பணி புரியும் கணவர்.. உடன் அழைத்துச் செல்லாத கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

 

ராணுவத்தில் பணி புரியும் கணவர்.. உடன் அழைத்துச் செல்லாத கோபத்தில் மனைவி எடுத்த விபரீத முடிவு!

ராணுவ வீரரான தன் கணவர், உடன் அழைத்துச் செல்லவில்லை என்று மனைவி எடுத்த விபரீத பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நம் நாட்டுக்காகப் போராடும் ராணுவ வீரர்கள் தங்களது குடும்பத்தினரைப் பிரிந்து ஏதோ ஒரு இடத்தில் பாடுபட்டு வருகின்றனர். ஆண்டிற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ குடும்பத்தினரைப் பார்க்க வாய்ப்பு கிடைத்து வரும் அவர்கள், திரும்பிச் செல்லும் போது பல துன்பங்களை நெஞ்சில் சுமந்து கொண்டே செல்கின்றனர். நாம் நிம்மதியாகத் தூங்கப் பகல், இரவு பாராமல் அயராது உழைக்கும் அவர்களை எண்ணி அவர்களின் குடும்பங்கள் தினமும் கவலைப்படுவதுண்டு. இதில், புதிதாகத் திருமணம் ஆன தம்பதியாக இருந்தால் அது மிகவும் கடினம். இந்நிலையில், ராணுவ வீரரான தன் கணவர், உடன் அழைத்துச் செல்லவில்லை என்று மனைவி எடுத்த விபரீத முடிவு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

ttn

திண்டுக்கல் மாவட்டம் பண்ணப்பட்டியைச் சேர்ந்த லட்சுமணன் ராணுவ வீரராக பணிபுரிந்து வருகிறார். இவருக்குக் கடந்த ஆண்டு ஈஸ்வரி என்ற பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. விடுமுறையில் திண்டுக்கல் வந்திருந்த லட்சுமணன் மீண்டும் காஷ்மீருக்கு பணிக்காகத் திரும்பியுள்ளார். அப்போது, ஈஸ்வரி தன்னை உடன் அழைத்துச் செல்லுமாறு லட்சுமணனிடம் கேட்டுள்ளார். ஆனால், அதனை மறுத்த லட்சுமணன் ஈஸ்வரியை வீட்டிலேயே விட்டுச் சென்றுள்ளார். 

ttn

இது குறித்து செல்போனில் பேசிக் கொண்டிருந்த இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதனால், கோபமடைந்த ஈஸ்வரி கடந்த 20 ஆம் தேதி இரவு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணத்திற்குக் காரணம் லட்சுமணன் தான் என்று ஈஸ்வரியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதன் பின்னர், அவர்களை போலீசார் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.