ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளுடன் பேக்கரி இயங்க அனுமதி!

 

ராணிப்பேட்டை மாவட்டத்திலும் கட்டுப்பாடுகளுடன் பேக்கரி இயங்க அனுமதி!

தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை என்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

கொரோனா வைரஸில் இருந்து மக்களை காக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், வைரஸ் பரவுதல் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே இருக்கிறது.  இதனிடையே மக்கள் அதிகமாக கூடுவதை தவிர்ப்பதற்காக அத்தியாவசிய கடைகளை தவிர பிற கடைகள் இயங்க கூடாது என்று அறிவித்தது. தமிழகத்தில் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதி சென்னை என்பதால், ஊரடங்கு நீட்டிக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

ttn

அதனால் மக்களின் தேவையை கருத்தில் கொண்டு சென்னையில் காலை 6 மணி முதல் 1 மணி வரை பேக்கரிகள் இயங்க மாநகராட்சி அனுமதி அளித்தது. இந்நிலையில் ராணிப்பேட்டை மாவட்டத்திலும்  இன்று முதல் தனி மனித இடைவெளியுடன் பேக்கரி கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இனிப்பு, கார வகைகளை விற்காமல் பிரெட் மட்டுமே விற்க வேண்டும் என்று மாவட்ட எஸ்பி அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.