ராணா கபூர் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல திட்டம் – அமலாக்கத் துறை சதி திட்டத்தை முறியடித்தது

 

ராணா கபூர் வெளிநாடுக்கு தப்பிச் செல்ல திட்டம் – அமலாக்கத் துறை சதி திட்டத்தை முறியடித்தது

எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் சொத்துக்களை விற்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்து தடுத்துள்ளனர்.

டெல்லி: எஸ் பேங்க் நிறுவனர் ராணா கபூர் சொத்துக்களை விற்று விட்டு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல முயன்றதை அமலாக்கத் துறையினர் கண்டறிந்து தடுத்துள்ளனர்.

பிரபல தனியார் வங்கியான எஸ் பேங்க் வாராக்கடன், மோசமான நிர்வாகம் உள்ளிட்ட காரணங்களால் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. கடந்தாண்டு சுமார் ரூ.1500 கோடி இழப்பை எஸ் பேங்க் சந்தித்தது. இதையடுத்து நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் இந்த வங்கி நிர்வாகத்தை ரிசர்வ் வங்கி தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்துள்ளது. மேலும் வாடிக்கையாளர்கள் ரூ.50ஆயிரம் வரை மட்டுமே பணம் எடுக்க முடியும் என்ற கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த வங்கியில் பணம் வைத்துள்ள வாடிக்கையாளர்கள் பதட்டத்துடன் காணப்படுகின்றனர்.

ttn

இந்த நிலையில், ராணா கபூர் வெளிநாடு தப்பிச் செல்ல  திட்டமிட்ட தகவல் அமலாக்கத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. எஸ் வங்கியில் அவருக்கு இருந்த பங்குகள் அனைத்தையும் கடந்த டிசம்பர் மாதம் விற்பனை செய்திருந்தார். அத்துடன் சில சொத்துகளையும் விற்பனை செய்தார். மூன்று மாதங்களுக்கு முன்பு டெல்லியில் தனக்கு சொந்தமான 3  வீடுகளை ராணா கபூர் விற்பனை செய்துள்ளார். அந்த வீடுகள் அவரது மனைவி மற்றும் அவரது உறவினர்கள் பெயரில் வாங்கப்பட்டிருந்தன. லண்டன், பிரான்ஸ் அல்லது அமெரிக்கா போன்ற நாடுகளில் ஏதாவது ஒன்றிற்கு தப்பிச் செல்ல ராணா கபூர் திட்டம் தீட்டியிருக்கிறார். ஆனால் அவரது சதித் திட்டத்தை அமலாக்கத் துறையினர் முறியடித்து விட்டனர்.