ராஜ்ய சபா எம்.பி-யார்? நெருக்கும் கூட்டணி கட்சிகள்… திணறும் எடப்பாடி! 

 

ராஜ்ய சபா எம்.பி-யார்? நெருக்கும் கூட்டணி கட்சிகள்… திணறும் எடப்பாடி! 

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலம் அடிப்படையில் தி.மு.க, அ.தி.மு.க தலா மூன்று இடங்களில் வெற்றி பெறலாம். தி.மு.க தன்னுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.

ராஜ்ய சபா எம்.பி பதவிக்கு போட்டியிடுபவர்கள் யார் என்ற பெயரைக் கூட அறிவிக்க முடியாத அளவுக்கு ஓ.பி.எஸ், இ.பி.எஸ் நெருக்கடி நிலையில் சிக்கித் தவிப்பதாக அ.தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தைச் சேர்ந்த ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் அடுத்த மாதம் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. தற்போதைய எம்.எல்.ஏ-க்கள் பலம் அடிப்படையில் தி.மு.க, அ.தி.மு.க தலா மூன்று இடங்களில் வெற்றி பெறலாம். தி.மு.க தன்னுடைய வேட்பாளர் பட்டியலை அறிவித்துவிட்டது.

admk

ஆனால், அ.தி.மு.க இன்னும் தன்னுடைய பட்டியலை வெளியிட முடியாமல் திணறி வருகிறது. கூட்டணிக் கட்சிகள் ஒருபுறம் நெருக்கடி தர, கட்சியின் மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் என பல தரப்பினரும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தை நெருக்கி வருகின்றனர். 

மாநிலங்களவை சீட் கொடுத்தால் சட்டமன்ற தேர்தலில் கூட்டணி தொடரும், இல்லை என்றால் வெளியேறுகிறோம் என்று தே.மு.தி.க மிரட்டி வருகிறது, டெல்லியிலிருந்து அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கிறார் ஜி.கே.வாசன். வேலூர் நாடாளுமன்றத் தேர்தலில் பணத்தைத் தண்ணீராக செலவு செய்தும் வெற்றி பெற முடியவில்லை, அ.தி.மு.க-வுக்காத்தான் பணத்தை இறக்கினேன். எனவே, மாநிலங்களவை சீட்டாவது கொடுங்கள் என்று கேட்டுக்கொண்டிருக்கிறார் ஏ.சி.சண்முகம். 

gk vasan

இப்படி கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி அளிக்க, கட்சிக்குள் மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.முனுசாமி என்று பலரும் போட்டிப்போட்டு வருகின்றனர். ஜெயலலிதா ஜாதகப்படி அவரது பிறந்த நாள் மாசி மகத்தன்று வேட்பாளர்கள் பெயர் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அன்று வெளியாகாததற்கு இந்த நெருக்கடிதான் காரணம் என்று கூறப்படுகிறது. யாருக்கு சீட் கொடுப்பது என்று தவித்து வருகிறார்கள் ஒ.பி.எஸ், இ.பி.எஸ்…  

வேட்புமனு தாக்கல் செய்ய வருகிற 13ம் தேதிதான் கடைசி நாள். 12ம் தேதி சங்கடஹர சதுர்த்தி மற்றும் சுபதினம்… அதனால் அன்றைக்கு வேட்பு மனு தாக்கல் செய்தால் சுபிட்சமாக இருக்கும் என்று கட்சியினர் கருதுகின்றனர். அதற்குள்ளாக அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வேட்பாளர் கனவில் மிதப்பவர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர். இப்போதே இறுதி முடிவு எடுத்தால் பல்வேறு குழப்பம் வரலாம். கடைசி நேரத்தில் அறிவிப்பதன் மூலம் கொஞ்சம் சமாளிக்கலாம் என்று அ.தி.மு.க கூட்டுத் தலைமை கருதுகிறதாம். அதனால்தான் அறிவிப்பு வெளியாகத் தாமதம் என்று கூறப்படுகிறது. எப்படியும் இன்று அல்லது நாளைக்குள் அறிவிப்பு வெளியாகிவிடும் என்று அ.தி.மு.க-வினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.