ராஜ்ய சபா எம்.பி பதவி: இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!

 

ராஜ்ய சபா எம்.பி பதவி: இன்று முதல் வேட்புமனு தாக்கல் ஆரம்பம்!

ஆறு பேரின் மாநிலங்களவை எம்.பி.பதவியும்  அடங்கும்.  இதனால் புதிய எம்பிகளுக்கான தேர்தல் வரும்  26-ந் தேதி   நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

நாடாளுமன்ற ராஜ்யசபாவில்  தற்போது எம்.பி.க்களாக இருக்கும் 55 பேரின் பதவிக் காலம் ஏப்ரல் 2-ந் தேதியுடன் முடிவடைகிறது. இதில் தமிழகத்தில் அதிமுக ராஜ்ய சபா எம்பி முத்துக்கருப்பன், விஜிலா சத்யானந்த், செல்வராஜ், பாரதிய ஜனதாவில் இணைந்த சசிகலா புஷ்பா, திமுகவின் திருச்சி சிவா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ரங்கராஜன் ஆகிய ஆறு பேரின் மாநிலங்களவை எம்.பி.பதவியும்  அடங்கும்.  இதனால் புதிய எம்பிகளுக்கான தேர்தல் வரும்  26-ந் தேதி   நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. 

ttn

இந்நிலையில் மாநிலங்களவை தேர்தலுக்கான  வேட்புமனு தாக்கல் இன்றுமுதல் தொடங்குகிறது. மனு தாக்கல் செய்ய 13-ந் தேதி கடைசி நாள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ttn

இந்த தேர்தலில்  திமுக சார்பில் திருச்சி சிவா, அந்தியூர் செல்வராஜ் மற்றும் என். ஆர். இளங்கோ  ஆகியோர் போட்டியிட போவதாக திமுக தலைமைக்கழகம் அறிவித்துள்ளது.

 

இருப்பினும் அதிமுக சார்பில் இன்னும் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்படவில்லை.