ராஜ்யசபா தேர்தல்: கொடுத்த வாக்கை காப்பாற்றிய ஸ்டாலின்; உற்சாகத்தில் வைகோ!

 

ராஜ்யசபா தேர்தல்: கொடுத்த வாக்கை காப்பாற்றிய ஸ்டாலின்; உற்சாகத்தில் வைகோ!

மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 

vaiko

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல்  வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால் ஆளும் அதிமுக சார்பில் 3 பேர்களும், திமுக சார்பில் 3 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க முடியும்.

vaiko

இந்நிலையில், திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதில் வழக்கறிஞர் பி.வில்சன், தொமுசவை சேர்ந்த சண்முகம் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி, மதிமுகவுக்கு ஒரு தொகுதியை வழங்க திமுக முடிவெடுத்த நிலையில், அதன்படி மதிமுகவுக்கு ஒரு இடம் வழங்கியுள்ளது.