ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

 

ராஜ்யசபா தேர்தல்: அதிமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

சென்னை:  மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

admk

தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்குத் தேர்வான 6 பேரின் பதவிக்காலம் இம்மாதம் 24ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதற்கான தேர்தல்  வரும் 18 ஆம் தேதி நடைபெறும் என்று  ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இதற்கான வேட்பு மனுத்தாக்கல் இன்று தொடங்குகிறது. இதனால் ஆளும் அதிமுக சார்பில் 3 பேர்களும், திமுக சார்பில் 3 பேரும் மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்க முடியும்.

admk

இந்நிலையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலைத் தலைமை கழகம் அறிவித்துள்ளது. அதில் முன்னாள் அமைச்சர் முஹம்மத் ஜான், மேட்டூர் நகர செயலாளர் எஸ்.சந்திரசேகரன் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.  கடந்த மக்களவைத் தேர்தலின் போது ஏற்பட்ட ஒப்பந்தத்தின்படி,  கூட்டணிக் கட்சியான பாமகவிற்கு அதிமுக ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது