ராஜீவ் காந்தி படுகொலை! மறக்கமுடியுமா இந்த நாளை? நடந்தது எப்படி??

 

ராஜீவ் காந்தி படுகொலை! மறக்கமுடியுமா இந்த நாளை? நடந்தது எப்படி??

பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக மும்பையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ‘ராஜீவ் காந்தி படுகொலை போன்ற படுகொலை’ என்று உள்ளதாகக் கூறப்படுகிறது.

பிரதமரைக் கொல்ல சதித்திட்டம் தீட்டப்பட்டதாக மும்பையில் கைப்பற்றப்பட்ட கடிதத்தில் ‘ராஜீவ் காந்தி படுகொலை போன்ற படுகொலை’ என்று உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்திய வரலாற்றில் இன்னும் இரத்தம் உறையாத ராஜீவ் படுகொலை எப்படி நடந்தது?

rajiv

இந்தியா இலங்கைக்கு அனுப்பிய தனது அமைதிப் படையை திரும்பப் பெற்றிருந்த சூழலில், மே 21 1991 அன்று இந்தியாவில் ஆறாவது பிரதமரான ராஜீவ் காந்தி தேர்தல் பிரசாரத்துக்காக சென்னைக்கு வந்தார். சென்னையில் இருந்து ஒரு காரில், அப்போது பிரசாரம் நடந்து கொண்டிருந்த ஸ்ரீவில்லிப்புத்தூருக்கு ராஜீவ் காந்தி சென்றார். இந்தப் பயணம் நிகழ்ச்சி நிரலில் இல்லை. வண்டியை விட்டு இறங்கி மேடையை நோக்கி ராஜீவ் காந்தி நடந்தபோது, தொண்டர்கள், மக்கள், பள்ளிக் குழந்தைகள் உள்ளிட்டோர் அவருக்கு மாலை அணிவித்தனர். மக்கள் மத்தியில் அவர் இருந்தார். அப்போது பொதுமக்களோடு மக்களாக வந்த தானு என்ற தற்கொலைப் படை கொலையாளி உடையில் மறைத்து வைத்திருந்த ஆர்.டி.எக்ஸ். குண்டை வெடிக்க வைத்ததன் மூலம் அவரைக் கொன்றார்.

rajiv

இந்தக் குண்டுவெடிப்பில் ராஜீவ் காந்தியோடு, அங்கிருந்த பிற 14 பேரும் படுகொலைக்கு ஆளாகினர். இந்தப் படுகொலைகளுக்கு பாதுகாப்புக் குறைபாடுகள் பிரதான காரணமாகக் கூறப்பட்டன. மக்கள் மத்தியில் வரும் தலைவர்கள் தங்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளில் கவனமாக இருக்க வேண்டியதன் அவசியம் இதன்மூலம் உலகெங்கும் உணரப்பட்டது. இத்தனைக்கும் அப்போதைய தமிழக ஆளுநர் பீஷ்ம நாராயண் சிங், தனது அதிகாரப்பூர்வ நெறிமுறைகளை மீறி, ராஜீவ் காந்தியை தமிழ்நாட்டிற்கு வந்தால் தமது உயிருக்கு ஆபத்து என்று இருமுறை எச்சரித்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

rajiv

இது தொடர்பான வழக்கில் இந்திய உச்ச நீதிமன்றம், ராஜீவ் காந்தியின் கொலை தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனின் தனிப்பட்ட விரோதம் காரணமாக நடத்தப்பட்டது என்றது. ஆனால், விடுதலைப் புலிகள் அமைப்பு இதனை ஏற்கவில்லை. விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன், விடுதலைப் புலிகளின் ஆலோசகர் ஆண்டன் பாலசிங்கம் ஆகியோர் இதனை மறுத்து உள்ளனர்.

rajiv

ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பின்னர் பிரதமர் போன்ற உயர் பொறுப்பில் உள்ளவர்களின் பாதுகாப்பு குறித்து வர்மா கமிஷன் ஒரு ஆய்வை வெளியிட்டது. அதன் பரிந்துரைகள் பின்பற்றப்படும்போது பிரதமரின் பாதுகாப்பை அரசால் மீள்உறுதி செய்யமுடியும்.

rahul

ராஜீவ் காந்தி படுகொலை நிகழ்ந்து 28 ஆண்டுகள் கடந்துவிட்டாலும் அவரின் மறைவால் ஏற்பட்ட வடு நாட்டு மக்களின் மனதிலிருந்து அழியவில்லை. ராஜீவ் கொலை குற்றவாளிகளாக கருதப்படும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேர் இன்னும் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.