ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மத்தியச் சிறையில் உள்ள முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல்..!

 

ராஜீவ் காந்தி கொலை வழக்கு: மத்தியச் சிறையில் உள்ள முருகனிடம் இருந்து செல்போன் பறிமுதல்..!

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது பேரறிவாளன், ராபர்ட் பயஸ், நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டனர். உயர் பாதுகாப்பு பிரிவு 3-ல் இருந்த முருகனின் அறையில் திடீரென காவல்துறையினர்  கடந்த வெள்ளிக் கிழமை சோதனை மேற்கொண்டனர். அதில் முருகன் அறையில் இருந்து ஒரு செல்போன் பறிமுதல் செய்யப் பட்டது. இதனையடுத்து, பாகாயம் அவர் மீது வழக்குப்பதிவு செய்து, முருகனை . உயர் பாதுகாப்பு பிரிவு-1 ல் மாற்றினர். முருகன் மாற்றப்பட்ட அறையில் மீண்டும் திங்கள் கிழமை காவல்துறையினர் சோதனை மேற்கொண்டதில் 2 சிம் கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 

Murugan - Nalini

இதனால், மத்திய சிறையில் முருகனுக்கு வழங்கப் பட்டு வந்த சலுகைகளான நளினி- முருகன் சந்திப்பு, பார்வையாளர்கள் சந்திப்பு போன்றவற்றை ரத்து செய்யப்போவதாகச் சிறைத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் , பறிமுதல் செய்யப்பட்ட செல்போன், சிம் கார்டுகள் தொடர்பாக முருகனிடம் விசாரணை மேற்கொள்ளப் பட்டு வருகிறது.