ராஜீவ்காந்தி கொலை வழக்கு : ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்

 

ராஜீவ்காந்தி கொலை வழக்கு : ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயஸ், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், ராபர்ட் பயஸ், முருகன், நளினி உட்பட 7 பேர் கைது செய்யப்பட்டு மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 28 ஆண்டுகளாகச் சிறையிலிருந்து வரும் இந்த எழுவரும் தங்களை விடுவிக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதில், பேரறிவாளன் தனது தந்தையின் உடல் நிலையைக் காரணம் காட்டி இரண்டாவது முறையாக பரோலில் வெளியே சென்றுள்ளார். 

rajiv gandhi

சிறையில் இருக்கும்  ராபர்ட் பயஸ் தனது மகனின் திருமண வேலைகளைக் கவனிக்க வேண்டும் என்பதால் 1 மாதம் பரோல் வழங்கக்கோரி சிறைத்துறையிடம் மனு அளித்தார். ஆனால், சிறை அதிகாரிகள் அவரது மனுவைப் பரிசீலிக்கவில்லை. இதனால், ராபர்ட் பயஸ் உயர்நீதி மன்றத்தில் பரோல் அளிக்கும் படி மனு அளித்தார். அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் சிறை அதிகாரிகளின் கருத்தைத் தெரிவிக்கும் படி உத்தரவிட்டிருந்தது. 

Robert

அதன் படி, இன்று ராபர்ட் பயஸின் மனு மீண்டும் உயர்நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டது. அதில், பயஸுக்கு நிபந்தனையின் அடிப்படையில் பரோல் வழங்கலாம் என்று சிறை அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதனையடுத்து, நீதிபதிகள் ராபர்ட் பயஸுக்கு 30 நாட்கள் பரோல் வழங்கி உத்தரவிட்டுள்ளனர். மேலும், முன்னதாக பரோலில் சென்ற நளினி மற்றும் பேரறிவாளனுக்கு விதித்த நிபந்தனைகளைப் பின்பற்றும் படி அறிவுறுத்தியுள்ளனர்.