ராஜினாமா கடிதம் வழங்கிய ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ! – அதிர்ச்சியில் கமல்நாத்… உற்சாகத்தில் பா.ஜ.க

 

ராஜினாமா கடிதம் வழங்கிய ம.பி காங்கிரஸ் எம்.எல்.ஏ! – அதிர்ச்சியில் கமல்நாத்… உற்சாகத்தில் பா.ஜ.க

மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கூட்டணிக் கட்சிகளின் தயவோடு காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் குறைவாகவே காங்கிரசிடம் உள்ளது. இதனால் காங்கிரஸ் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இது கமல்நாத்துக்கு அதிர்ச்சியையும் பா.ஜ.க-வினருக்கு உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
மத்திய பிரதேசத்தில் கமல்நாத் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. அங்கு கூட்டணிக் கட்சிகளின் தயவோடு காங்கிரஸ் ஆட்சி செய்து வருகிறது. பெரும்பான்மைக்கு இரண்டு இடங்கள் குறைவாகவே காங்கிரசிடம் உள்ளது. இதனால் காங்கிரஸ் அரசை கவிழ்க்க எம்.எல்.ஏ-க்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பா.ஜ.க ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

cm

காங்கிரஸ் எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர், சுயேச்சை எம்.எல்.ஏ-க்கள் மூன்று பேர் கடத்தப்பட்டதாக கூறப்பட்டது. தன்னுடைய தந்தையை மூன்று நாட்களாக காணவில்லை, அவரை தொடர்புகொள்ள முடியவில்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ-வின் மகன் புகார் அளித்திருந்தார். கட்சி மாறினால் 35 கோடி வரை தர தயாராக உள்ளதாக பா.ஜ.க பேரம் பேசி வருகிறது என்றும் கூறப்பட்டது. ஆனால் இவை அனைத்தையும் பா.ஜ.க மறுத்துவருகிறது. ஆளுங்கட்சியில் இருந்து எம்.எல்.ஏ-க்களை இழுத்து ஆட்சியைக் கவிழ்க்கும் பா.ஜ.க-வின் கர்நாடக மாடல் அனைவரும் அறிந்ததே… அதனால் பா.ஜ.க சொல்வதை யாரும் நம்பத் தயாராக இல்லை.
இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஹர்தீப் சிங் தன்னுடைய பதவியை ராஜினாமா செய்து சபாநாயகருக்கு கடிதம் அனுப்பியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. மேலும் சில எம்.எல்.ஏ-க்கள் தங்கள் கடிதத்தை வழங்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழக்கும் நிலைக்கு ஆளாகி உள்ளது. 
ஆபரேஷன் லோட்டசை ஆபரேஷன் கமல் வீழ்த்திவிட்டது, கடத்தப்பட்ட எம்.எல்.ஏ-க்கள் கமல்நாத்துடன் தொடர்பில் உள்ளனர், அவர்கள் விரைவில் போபால் திரும்புவார்கள் என்று காங்கிரஸ் அறிவித்த சில மணி நேரத்தில் எல்லாம் எம்.எல்.ஏ ராஜினாமா கடிதம் தகவல் வெளியானதால் மத்தியப் பிரதேச அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

resignation-letter

இது குறித்து அம்மாநில முதல்வர் கமல்நாத் கூறுகையில், “ஹர்தீப் சிங் ராஜினாமா செய்துவிட்டதாக செய்தி அறிந்தேன். ஆனால், அது தொடர்பான கடிதம் எதுவும் எனக்கு வரவில்லை. ராஜினாமா பற்றி அவர் என்னிடம் எதுவும் தெரிவிக்கவில்லை. இது பற்றி அவரிடம் நான் பேசவும் இல்லை. பேச சரியானதாக இருக்கும் என்றும் நான் கருதவில்லை” என்றார்.
மத்தியப் பிரதேச அரசியல் நாளுக்கு நாள் மோசமாகிக்கொண்டே இருக்கிறது. எம்.எல்.ஏ ராஜினாமா அறிவிப்பு பா.ஜ.க தொண்டர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக படுகொலை என்பது பற்றி கூட கவலையின்றி பா.ஜ.க ஆட்சிக்கு வர வேண்டும் என்று சமூக ஊடகங்களில் அவர்கள் பதிவிட்டு வருகின்றனர்.