ராஜினாமா கடிதம் வழங்கிய ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்! – முதல்வர் பதவி ஏற்க தயாரானார் சிவ்ராஜ்சிங் சௌகான்

 

ராஜினாமா கடிதம் வழங்கிய ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள்! – முதல்வர் பதவி ஏற்க தயாரானார் சிவ்ராஜ்சிங் சௌகான்

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறியுள்ள நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் காங்கிரஸ் கட்சியில் இருந்து 20 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறியுள்ள நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா ஆதரவு எம்.எல்.ஏ-க்கள் 16 பேர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து கடிதம் அளித்துள்ளனர். 230 எம்.எல்.ஏ-க்கள் கொண்ட மத்திய பிரதேச சட்டமன்றத்தில் காங்கிரஸ் கட்சிக்கு 114 எம்.எல்.ஏ-க்கள் இருந்தனர். ஆட்சி அமைக்க 116 எம்.எல்.ஏ-க்கள் தேவை என்ற நிலையில் கூட்டணிக் கட்சிகள் ஆதரவுடன் கமல்நாத் மத்தியப் பிரதேச முதல்வராக பொறுப்பேற்றார். தற்போது ஜோதிராதித்ய சிந்தியா தலைமையில் 16 எம்.எல்.ஏ-க்கள் வெளியேறி தங்கள் ராஜினாமா கடிதத்தை சபாநாயகரிடம் அளித்துள்ளனர். இதனால், காங்கிரஸ் கட்சியின் பலம் 94 ஆக குறைந்துள்ளது.

bjp

பா.ஜ.க-வுக்கு 107 எம்.எல்.ஏ-க்கள் உள்ளனர். காங்கிரஸை விட அதிக எம்.எல்.ஏ-க்கள் இருப்பதால் பா.ஜ.க எளிதில் ஆட்சியை கைப்பற்றிவிட முடியும். அடுத்து நடைபெற உள்ள இடைத் தேர்தலில் ஒன்பது இடங்களில் வெற்றி பெற்றாலே பா.ஜ.க ஆட்சியை தக்க வைக்க முடியும். இந்த சூழலில் மத்தியப் பிரதேச பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் அனைவரும் போபாலுக்கு அழைக்கப்பட்டுள்ளனர். இன்று மாலை பா.ஜ.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நடக்கிறது.

bjp

இந்த கூட்டத்தில் பா.ஜ.க சட்டமன்ற தலைவராக மீண்டும் சிவ்ராஜ் சிங் சௌகான் தேர்வு செய்யப்பட உள்ளார். அதன் பிறகு அவர் ஆளுநர் மாளிகைக்கு சென்று தன்னை ஆட்சி அமைக்க அழைப்புவிடுப்பார் என்று கூறப்படுகிறது. இன்னும் சில நாட்களில் சிவ்ராஜ்சிங் சௌகான் மத்தியப் பிரதேச முதல்வர் ஆவார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.