ராஜாவைக் கவர்ந்த அப்துல்கலாம்

 

ராஜாவைக் கவர்ந்த அப்துல்கலாம்

இளையராஜா கல்லூரி மாணவிகள் சிலரை தனது இசையில் பாடவைக்க முடிவுஎடுத்தள்ளார்.

சமீபகாலமாக இளையராஜா பல்வேறு கல்லூரிகளுக்குச் சென்று மாணவ, மாணவிகளோடு உரையாடி அவர்கள் கேட்கும் கேள்விகளுக்குப் பதில் கொடுத்து அவர்களை நல்வழிப்படுத்தி வருகிறார். அதோடு தனது சினிமா வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அவர்களோடு பகிர்ந்து கொள்கிறார். 

இந்த யோசனை அவருக்கு இப்போது தோன்றியதில்லை. அப்துல்கலாம் உயிரோடு இருக்கும்போதே  தமிழக மாணவர்களை சந்திக்க திட்டம் வைத்திருந்தார். ஆனால் அப்போது அவருக்கு சில காரணங்களால் அதைச் செய்ய முடியவில்லை. அதன் பிறகு கலாம் அவர்கள் மறைந்த போது கூடிய மாணவர்கள், அவருக்கு முகம் தெரியாத ஊர்களில் கூட வைக்கப்பட்டிருந்த அஞ்சலி போஸ்டர்கள் இவைகளையெல்லாம் காரில் போகும் போது கவனித்திருக்கிறார் இளையராஜா. 
இந்த இளைய சமுதாயத்தை சென்று சேரும் வகையில் தாமும் மாணவர்களை சந்திப்பை தொடங்க வேண்டும் என்று முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாகதான் இன்று பல கல்லூரிகளுக்கும் சென்று உரையாடுகிறார். 

illayaraja

இந்தப் பயணத்தின் அடுத்தக் கட்டமாக கல்லூரி மாணவிகள் சிலர் பாட்டு பாட்டுவதைக் கண்டு தனது இசையில் பாடவைக்க முடிவெடுத்தார். அவர்களில் குரல்  வளம் உள்ள சிலரை தேர்ந்தெடுத்து  சமீபத்தில் குரல் பரிசோதனையும் செய்து விரைவில் அழைப்பதாக சொல்லியிருக்கிறார். அடுத்தப் படத்தில் இந்த அறிவிப்பு வரும் என்று எதிர்பார்க்கலாம்.