ராஜாவா தான் வந்தாரா சிம்பு? வெளியானது வசூல் நிலவரம்

 

ராஜாவா தான் வந்தாரா சிம்பு? வெளியானது வசூல் நிலவரம்

வந்தா ராஜாவா தான் வருவேன் சென்னையின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது

சென்னை: வந்தா ராஜாவா தான் வருவேன் சென்னையின் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிம்பு நடிப்பில் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ திரைப்படம் நேற்று  வெளியானது. இதில் சிம்புக்கு ஜோடியாக மேகா ஆகாஷ் நடித்துள்ளார். மேலும் பிரபு, கேத்தரீன் தெரசா, மகத் ராகவேந்திரா, நாசர், ரம்யா கிருஷ்ணன், ரோபோ சங்கர், யோகி பாபு, மொட்ட ராஜேந்திரன், சுமன், ஸ்ரீரஞ்சினி, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

இந்நிலையில், வந்தா ராஜாவா தான் வருவேன் திரைப்பம் சென்னையில் நேற்று  43 லட்சம் வசூல் செய்துள்ளதாக புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது. மேலும் இது 80லட்சம் எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.முன்னதாக சிம்பு நடித்த செக்க சிவந்த வானம் திரைப்படத்தின் வசூலை சாதனை இது முறியடிக்குமா என்ற சந்தேகம் அவரது ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.