ராஜாவாக ரஜினியுடன் வரும் சிம்பு!

 

ராஜாவாக ரஜினியுடன் வரும் சிம்பு!

சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை: சிம்பு நடித்துள்ள ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

‘செக்கச்சிவந்த வானம்’ படத்தை தொடர்ந்து தனது இரண்டாவது இன்னிங்க்ஸை வெற்றிகரமாக தொடங்கியுள்ள நடிகர் சிம்பு, சுந்தர்.சி இயக்கத்தில் ‘வந்தா ராஜாவாதான் வருவேன்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் ஷூட்டிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாக தயாராகி வருகிறது.

லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புரொமோ வீடியோவில், ராஜாவாக ஒய்யாரமாக சிம்பு நடந்து வருகிறார். படத்தின் டிரைலர் நவ.29ம் தேதி ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே தினம் ரஜினி நடித்துள்ள பிரம்மாண்ட படமான ‘2.0’ உலகம் முழுவதும் ரிலீசாகிறது.

இவ்விரு படங்களும் லைகா நிறுவனத்தின் தயாரிப்பு என்பதால், ‘2.0’ வெளியாகும் திரையரங்குகளில் சிம்புவின் ‘வந்தா ராஜாவா தான் வருவேன்’ பாடத்தின் டிரைலரும் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சிம்பு, மேகா ஆகாஷ், கேத்ரின் தெரசா, ரம்யா கிருஷ்ணன், மகத், யோகிபாபு, ரோபோ ஷங்கர் உள்ளிட்ட ஏராளமானோர் நடித்துள்ள இப்படம் பொங்கல் பண்டிகைக்கு பட்டையை கிளப்பும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது