ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

 

ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட் தேர்வு

ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட 5 மாநில தேர்தல்களில் பாஜக கடுமையான சரிவை சந்தித்துள்ளது. குறிப்பாக தான் ஆட்சி செய்த ராஜஸ்தான் உள்ளிட்ட 3 மாநிலங்களை காங்கிரஸிடம் பறிகொடுத்து பரிதாபமாக இருந்து வருகிறது. இதனால் பாஜக தொண்டர்கள் விரக்தியின் உச்சத்திற்கு சென்றுள்ளனர்.

இதற்கிடையே ராஜஸ்தானில்  ஆட்சியமைக்க 101 இடங்கள் தேவை என்ற சூழலில் 99 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளதால் அங்கு ஆட்சி அமைக்க காங்கிரஸ் கட்சிக்கு பகுஜன் சமாஜ் கட்சி ஆதரவு தெரிவித்தது. ஆனால் அங்கு முதல்வராக காங்கிரஸ் மூத்த தலைவர் அசோக் கெலாட் தேர்வு செய்யப்படுவாரா இல்லை இளம் தலைவர் சச்சின் பைலட்தேர்வு செய்யப்படுவாரா என்ற குழப்பம் நிலவி வந்தது.

இந்நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தின் முதல்வராக 67 வயதான் மூத்த தலைவர் அசோக் கெலாட்டும், துணை முதல்வராக சச்சின் பைலட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அசோக் கெலாட், ராஜஸ்தானில் சிறந்த ஆட்சியை வழங்குவோம் என்றார். அதேபோல் செய்தியாளர்களிடம் பேசிய சச்சின் பைலட், அசோக் கெலாட்டை முதல்வராக தேர்வு செய்த ராகுல் காந்திக்கு நன்றி என்றார்.