ராஜஸ்தானில் மகனை தேடி அலையும் சென்னைவாசி?!..

 

ராஜஸ்தானில் மகனை தேடி அலையும் சென்னைவாசி?!..

கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் ஹேமந்த் காணாமல் போயிருக்கிறார். ஏப்ரல் 23-ஆம் தேதி கல்வி நிர்வாகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர்.

சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் திருமாவளவன் (60), ராஜஸ்தான் பிலானியில் உள்ள பிட்ஸ் (Birla Institute of Science and Technology) கல்வி நிறுவனத்தில் படித்து வந்த இவரது மகன் ஹேம்ந்த்-ஐ கடந்த 20 நாட்களாக காணவில்லை.

chennai

23 வயதான ஹேம்ந்த், பிட்ஸில் M.tech பயின்று வந்தார். இது அவரது படிப்பின் இறுதி ஆண்டு ஆகும். கடந்த ஏப்ரல் 22-ஆம் தேதி முதல் ஹேமந்த் காணாமல் போயிருக்கிறார். ஏப்ரல் 23-ஆம் தேதி கல்வி நிர்வாகம் இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளது. அதற்கு அடுத்த நாள் காவல்துறையில் புகார் அளித்துள்ளனர். தேர்தல் நேரம் என்பதால் காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட முடியாது என கூறியதாக ஹேமந்தின் அண்ணன் விவேகானந்த் தகவல் தெரிவித்துள்ளார்.

son

இந்த குற்றசாட்டுக்கு மறுப்பு தெரிவித்த ஜுன்ஜுனு காவல்துறை கண்காணிப்பாளர் கவுரவ் யாதவ், நாங்கள் தேர்தல் வேலைகளில் பிஸியாக இல்லை. எங்களிடம் இதுபோன்ற வழக்குகளை கவனிக்க சிறப்பு அதிகாரிகள் இருக்கின்றனர். இந்த வழக்கில் எதாவது தடயம் கிடைக்குமா என பார்க்கிறோம் என்றார்.

மொபைல், பர்ஸ், ஐடி கார்டு என அத்தனை உடைமைகளையும் ஹாஸ்டலில் விட்டுச் சென்ற ஹேமந்த், எந்த சிசிடிவி காட்சியிலும் பதிவாகவில்லை. ஹேமந்த் குடும்பத்தார் கல்லூரி நிர்வாகத்தின் கவனமின்மையே இந்த சம்பவத்துக்கு காரணம் என தெரிவிக்கின்றனர்.

son

மகனை பிரிந்து நாட்கள் செல்ல செல்ல நம்பிக்கை இழந்த திருமாவளவன், தொடர் தேடுதலில் ஈடுபட்டு வருகிறார். பிட்ஸில் இருந்து காலை கிளம்புகிறவர், கடும் வெயிலையும் தூசியையும் பொருட்படுத்தாது மகனின் புகைப்படத்துடன் அலைகிறார். மாலை இருட்டுவதற்குள் தன் தேடுதலை முடித்துக்கொண்டு மறுநாள் வேறு இடத்திற்கு தேடி செல்கிறார். பிட்ஸ் நிர்வாகம் அவருக்கு உதவியாக இருக்கிறது. ஹேமந்த் பற்றிய தகவல்கள் வெகு விரைவில் தெரியும் என எதிர்பார்க்கப்படுகிறது.