ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கியிருக்கும் மருத்துவமனையில் பதறி அடித்து வெளியேறும் மற்ற நோயாளிகள்……

 

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் நோயாளிகள் தங்கியிருக்கும் மருத்துவமனையில் பதறி அடித்து வெளியேறும் மற்ற நோயாளிகள்……

ராஜஸ்தானில் கொரோனா வைரஸ் நோயாளிகள் சேர்க்கப்பட்டுள்ள மருத்துவமனையில், இந்த விஷயத்தை அறிந்த மற்ற நோயாளிகள் தங்களுக்கும் கொரோனா வைரஸ் பரவி விடும் என்ற அச்சத்தில் அந்த மருத்துவமனையிலிருந்து பதறி அடித்து வெளியேறி வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரில் 2 இத்தாலியர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. மேலும் 9 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என மருத்துவர்கள் சந்தேக படுகின்றனர். அவர்கள் அனைவருக்கும் ஜெய்பூரில் உள்ள எஸ்.எம்.எஸ். மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் அவர்கள் அனைவரும் அந்த மருத்துவமனையிலிருந்து ராஜஸ்தான்  சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.

மருத்துவமனை

ராஜஸ்தான்  சுகாதார அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனை 10 மாடிகள் கொண்ட கட்டிடம். இந்த மருத்துவமனையின் 286 நம்பர் வார்டில் கொரோனா வைரஸ் நோயாளிகள் வைக்கப்பட்டுள்ளனர். இந்த தகவல் அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் மற்ற நோயாளிகளுக்கு தெரியவந்தது. இதனையடுத்து இங்கு இருந்தால் கொரோனா வைரஸ் நோயாளிகளிடமிருந்து தங்களுக்கும் நோய் பரவி விடும் என்ற அச்சம் அவர்களுக்கு ஏற்பட்டது.

மருத்துவமனை

இந்த பயம் காரணமாக அந்த மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் தாங்களாகவே மருத்துவமனையை விட்டு வெளியேறி வருகின்றனர். ஐ.சி.யூ.வில் சிகிச்சை எடுத்து வரும் நோயாளிகள் கூட மருத்துவமனையை விட்டு வெளியேறி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தினமும் 500 வெளிநோயாளிகள் வரை அந்த மருத்துவமனைக்கு, கொரோனா வைரஸ் நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு அறிந்து வெளிநோயாளிகள் வருவது குறைந்து விட்டது. கடந்த புதன்கிழமையன்று 50-80 வெளிநோயாளிகள் மட்டுமே வந்து சிகிச்சை சென்று உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.