ராஜலட்சுமியை கொன்ற அரக்கன் மனநிலை சரியில்லாதவரா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

 

ராஜலட்சுமியை கொன்ற அரக்கன் மனநிலை சரியில்லாதவரா? மு.க.ஸ்டாலின் ஆவேசம்

சிறுமி ராஜலட்சுமியை கொன்ற அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சென்னை: சிறுமி ராஜலட்சுமியை கொன்ற அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூர் தலைவாய்பட்டியை அடுத்த சுந்தரபுரத்தை சேர்ந்தவர் சாமிமுத்து (வயது 48). விவசாயியாக இருக்கிறார். இவரது மனைவி சின்னப்பொண்ணு (வயது 45). இவர்களுக்கு  இரண்டு மகள்கள், ஒரு மகன் இருந்தனர்.

சாமிமுத்துவின் கடைசி மகள் ராஜலட்சுமி (வயது 13) தலைவாய்பட்டி ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். சிறுமியின் வீட்டிற்கு அருகில் வசித்துவந்த தினேஷ்குமார், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

ஆனால் தினேஷ்குமாரின் ஆசைக்கு சிறுமி ராஜலட்சுமி இணங்க மறுத்துவிட்டார். எனவே ராஜலட்சுமியின் தலையை தினேஷ்குமார் வீடு புகுந்து வெட்டி வீதியில் வீசியுள்ளார். இதனையடுத்து தினேஷ்குமார் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். ஆனால் அவருக்கு மனநிலை சரியில்லை என அவரது குடும்பத்தினர் காவல்துறையிடம் தெரிவித்தனர். இருப்பினும் தினேஷின் குடும்பத்தார் வேண்டுமென்றே நாடகமாடுகின்றனர், தினேஷூக்கு உச்சபட்ச தண்டனை கொடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் ராஜலட்சுமியின் படுகொலை குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில், சேலத்தில் 13வயது ராஜலட்சுமியை பாலியல் வன்கொடுமைசெய்து,தலையை துண்டித்த அரக்கனை குண்டர் சட்டத்தில் சிறைக்குள் தள்ளாமல், மனநிலை சரியில்லாதவர் என்று சித்தரிப்பதாக தெரிகிறது. முதலமைச்சர் மாவட்டத்தில் கொடுங்குற்றத்திற்கு நீதி வழங்கும் லட்சணம் இதுதானா? இரும்புக்கரத்தால் அடக்க வேண்டும் என பதிவிட்டுள்ளார்.