ராஜராஜ சோழனின் 1034ஆம் ஆண்டு சதய விழா :விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை..!

 

ராஜராஜ சோழனின் 1034ஆம் ஆண்டு சதய விழா :விழாக்கோலம் பூண்டுள்ள தஞ்சை..!

உலகப்புகழ் மிக்க தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் உதய நட்சத்திரத்தில் பிறந்தார்.

உலகப்புகழ் மிக்க தஞ்சை பெரிய கோயிலைக் கட்டிய மாமன்னன் ராஜராஜ சோழன் ஐப்பசி மாதம் உதய நட்சத்திரத்தில் பிறந்தார். நம் நாட்டில் பலர் ஆட்சி செய்தும் மக்களின் மனதில் இடம் பிடித்த மன்னர்கள் ஒரு சிலரே. இன்றைக்கும், தஞ்சையை ஆண்ட ராஜராஜ சோழ மன்னன் என்றால் அனைவர்க்கும் அவரது புகழ்மிக்க  வரலாறுகளைப் பற்றித் தெரியும். இவர் ஆட்சி முடிந்து 1000 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும், ஆண்டுதோறும் அம்மன்னனின் பிறந்தநாளை உதய விழாவாக அரசு கொண்டாடி வருகிறது.

ராஜராஜ சோழன்

அதே போல், இந்த வருடமும் ராஜராஜ சோழனின் 1044 ஆம் ஆண்டு சதய விழா இன்று தஞ்சையில் மங்கள வாத்தியங்களுடன் தொடங்கியுள்ளது. இந்த விழாவை முன்னிட்டு, தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப் பட்டு, தஞ்சை மாநகரமே விழாக் கோலத்துடன் காட்சியளிக்கிறது.

tanjore

அதுமட்டுமின்றி, தஞ்சை பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா மற்றும் பெரியார் சிலையும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. மேலும், ராஜராஜ சோழனின் 1034ஆம் ஆண்டு சதய விழாவால் நாளை தஞ்சைக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.