ராஜமவுலியின் பிரம்மாண்ட படைப்பில் பிரபல ஹாலிவுட் நட்சத்திரங்கள்!

 

ராஜமவுலியின் பிரம்மாண்ட படைப்பில் பிரபல ஹாலிவுட்  நட்சத்திரங்கள்!

அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.

‘பாகுபலி’ படத்துக்கு பிறகு ராஜமவுலி இயக்கத்தில் உருவாகும் படம் ’ஆர்.ஆர்.ஆர்’. அல்லுரி சிதாராமாஜு, கொமரம் பீம் என்ற இரண்டு சுதந்திரப் போராட்ட வீரர்களின் வாழ்க்கையை முன்வைத்து 1920-களில் கதை நடைபெறுகிறது. இ ந்தப் படத்தின் மூலம் மஹதீரா படத்துக்கு பிறகு ராம் சரண் – ராஜமவுலி ஆகியோர் இணைந்துள்ளனர்.

rrr

அதேபோல் முதல்முறையாக ஜூனியர் என்டிஆரும், ராம் சரணும் இந்தப் படத்தில் இணைந்துள்ளனர்.மேலும் பிரபல இந்தி நடிகர் அஜய் தேவ்கன், சமுத்திரகனி, ஆலியா பட் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். படம் அடுத்த ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி, வெளியாக இருக்கிறது அதிக பொருட்செலவில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தின் தொடக்க விழா கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் துவங்கியது.

rrr

இந்தப் படத்தில் ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்க ஒப்பந்தமாகி இருந்த பிரிட்டீஸ் நடிகை டெய்சி எட்கர் ஜோன்ஸ் திடீரென விலகினார். அவருக்கு பதிலாக யாரும் கிடைக்காததால், படத்தின் கதை மாறிவிட்டதாகவும், படம் கைவிட பட்டதாகவும் செய்திகளை வெளியாகின. 

rrr

இந்நிலையில் ஆர்ஆர்ஆர் படத்தில் ஹாலிவுட் நடிகை ஒலிவியா மோரிஸ், ஜெனிஃபர் என்ற கேரக்டரில் நடிக்கிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்  ஜூனியர் என்.டி.ஆர் ஜோடியாக நடிக்கவுள்ளார். மேலும் பிரபல ஹாலிவுட் பிரபலங்களான  ரேய் ஸ்டீவன்சன்  மற்றும் ஐரிஸ் நடிகை அலிசான் டூடி ஆ ஆகியோரும் இந்த படத்தில் நடிக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.