ராங்கி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு

 

ராங்கி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு

த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

ராங்கி படத்தின் இரண்டாம் போஸ்டர் வெளியீடு

சென்னை: த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள ராங்கி படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது. 

தமிழ் சினிமாவில் 5 வருடங்களாக முன்னணி நடிகையாக நீடித்திருப்பதே கடினம். ஆனால், 16 வருடம் ரசிகர்கள் மனதில் கனவு கன்னியாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. தற்போது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார். 

அந்த வரிசையில் ‘எங்கேயும் எப்போதும்’ பட இயக்குநர் சரவணன் இயக்கும் ’ராங்கி’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியான நிலையில் படத்தின் இரண்டாவது போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. 

கையில் துப்பாக்கி, காயங்களுடன் கொம்பாக அமர்ந்துள்ள த்ரிஷாவின் இரண்டாவது போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.