ராக்கி வித் காக்கி: செல்பி எடுத்து சாதனை படைத்த போலீசார்

 

ராக்கி வித் காக்கி: செல்பி எடுத்து சாதனை படைத்த போலீசார்

ரக்‌ஷா பந்தனை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, அதிக செல்பிகளை எடுத்த சத்தீஸ்கர் மாநில போலீசார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்

ராய்பூர்: ரக்‌ஷா பந்தனை கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட பெண்கள் பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியின் போது, அதிக செல்பிகளை எடுத்த சத்தீஸ்கர் மாநில போலீசார் கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் மாதம் 25-ம் தேதியன்று ரக்‌ஷா பந்தனை கொண்டாடும் வகையில் ‘ராக்கி வித் காக்கி’ என்ற பெண்கள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூர் நகர போலீசார் நடத்தினர். காவல்துறையினரை எளிதில் அணுகி தங்களது பிரச்னைகள் குறித்து பெண்கள் வெளிப்படையாக பேச வேண்டும் என்பதற்காக இந்நிகழ்ச்சியை நடத்தப்பட்டது.

இதற்காக பிலாஸ்பூர் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரி, என பல்வேறு இடங்களில் பெண்களை போலீஸார் சந்தித்து விழிப்பு உணர்வு ஏற்படுத்தினர். சுமார் 10 மணி நேரம் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, 50,000-க்கும் மேற்பட்ட போலீசாருக்கு ராக்கி கட்டி பெண்கள் செல்பி எடுத்துக் கொண்டனர்.

இதையடுத்து, 10 மணி நேரம் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் இந்தியாவிலேயே முதன்முறையாக அதிக செல்பிகள் எடுக்கப்பட்டதற்காக கின்ன்ஸ் சாதனை அங்கீகாரம் பிலாஸ்பூர் காவல்துறைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பிலாஸ்பூர் எஸ்.பி., ஆரிஃப் கூறுகையில், போலீஸார் ஏற்படுத்திய விழிப்பு உணர்வு நிகழ்வுக்கு ஆதரவு அளித்த பல்லாயிரக்கணக்கான பெண்களால் இன்று பிலாஸ்பூர் போலீஸாருக்கு கின்னஸ் அங்கீகாரம் கிடைத்துள்ளது என்றார்.