ராகுல் ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து!

 

ராகுல்  ஹெலிகாப்டர் தரையிறங்க மம்தா அனுமதி மறுப்பு: கடைசி நேரத்தில் கூட்டம் ரத்து!

மேற்குவங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்காததால்,  காங்கிரஸ் பொதுக்கூட்டம்  ரத்து செய்யப்பட்டது

மேற்குவங்கம் : மேற்குவங்கத்தில் ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு அனுமதி அளிக்காததால்,  காங்கிரஸ் பொதுக்கூட்டம்  ரத்து செய்யப்பட்டது

மக்களவை தேர்தல்

ec

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது.  முதல் கட்டமாக அருணாசலபிரதேசம், ஆந்திரபிரதேசம், அசாம், பீகார், சட்டீஸ்கர், ஜம்மு காஷ்மீர், மகாராஷ்டிரா உள்ளிட்ட 18 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 91 தொகுதிகளுக்கு கடந்த 11 ஆம் தேதி வாக்குப்பதிவு நடந்து முடிந்தது. 

ராகுல் பிரசாரம் 

rahul

இந்நிலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று டார்ஜிலிங் தொகுதிக்குட்பட்ட சிலிகுரியில் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்று கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டது.  இதற்காக, அவர் ஹெலிகாப்டர்  சிலிகுரி மாநகர காவல் துறை ஆணையர் அலுவலக வளாகத்தில்  தரையிறக்க அனுமதி கேட்கப்பட்டது.

அனுமதி மறுப்பு 

rahul

ஆனால் அங்கு ஏற்கனவே ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளதால் அனுமதி மறுக்கப்பட்டது. இதன் காரணமாக ராகுல் காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. இது குறித்து கருத்து  தெரிவித்து வரும் காங்கிரஸ் கட்சியினரோ, ராகுல் காந்தியின் பரப்புரையைத் திட்டமிட்டுத் தடுப்பதாகக் குற்றச்சாட்டியுள்ளனர். 

முன்னதாக  மம்தா அரசு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரசாரத்துக்காக மேற்கு வங்கத்துக்கு வந்த போது அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டது. பின்பு அவர் சாலை மார்க்கமாக மேற்குவங்கத்துக்கு வந்து சென்றார்.

இதையும் வாசிக்க: ஜே.கே.ரித்தீஷ் மரணம் அதிர்ச்சியளிக்கிறது: நடிகர் விஷால் உருக்கம்!