ராகுல் காந்தி மலிவான விளம்பரம் செய்கிறார்: அருண் ஜெட்லி விமர்சனம்

 

ராகுல் காந்தி மலிவான விளம்பரம் செய்கிறார்: அருண் ஜெட்லி விமர்சனம்

விவசாயக்கடனை தள்ளுபடி செய்கிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலிவான விளம்பரம் செய்கிறார் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

ஜெய்ப்பூர்: விவசாயக்கடனை தள்ளுபடி செய்கிறேன் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மலிவான விளம்பரம் செய்கிறார் என மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி விமர்சனம் செய்துள்ளார்.

ராஜஸ்தான் மாநிலத்திற்கு டிசம்பர் 7-ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கிறது. 200 தொகுதிகளை கொண்டிருக்கும் ராஜஸ்தானை தக்கவைக்க பாஜகவும், பாஜகவை வீழ்த்தி அரியணையில் ஏற காங்கிரஸ் கட்சியும் தீவிர செயல்பாடுகளில் இறங்கியுள்ளன. இரண்டு கட்சிகளும் தங்களது பிரசாரத்தை வேகப்படுத்தியுள்ளன.

அந்த வகையில் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தி ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசும்போது மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால், 10 நாட்களில் விவசாய கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று கூறினார்.

இந்நிலையில் ராகுலின் பேச்சு குறித்து ஜெய்ப்பூரில் அருண் ஜெட்லி கூறுகையில், ராஜஸ்தானில் ஆட்சியை பிடிக்க மாட்டோம் என்ற தைரியத்தில் இப்படிப்பட்ட வாக்குறுதிகளை ராகுல் கூறுகிறார். பகுதி அளவுக்கு விவசாய கடன்களை தள்ளுபடி செய்தால்கூட வளர்ச்சி பணிகளுக்கு நிதி தட்டுப்பாடு ஏற்படும். ஒரு விஷயம் குறித்த ஞானம் இல்லாதவர்கள்தான், இதுபோன்ற மலிவான விளம்பரம் தேடுவார்கள் என்றார்.