ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் அத்வாலே புகழாரம்

 

ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்கிறார்: மத்திய அமைச்சர் அத்வாலே புகழாரம்

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததன் மூலம், ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்வதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியுள்ளார்.

டெல்லி: மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் ஆட்சியை பிடித்ததன் மூலம், ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்வதாக மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே புகழாரம் சூட்டியுள்ளார்.

 மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய மாநில சட்டப்பேரவை தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. ஆனால், அம்மாநில முதல்வரை தேர்வு செய்வதில் இழுபறி நீடித்ததால் ராகுல் காந்திக்கு போதுமான அனுபவம் இல்லை என அரசியல் விமர்சகர்கள் பகிரங்கமாக விமர்சித்தனர்.

அந்த விமர்சனங்கள் தவிடு பொடியாகும் வகையில், ராஜஸ்தான் முதல்வராக அசோக் கெலாட், மத்தியப்பிரதேச முதல்வராக கமல்நாத், சத்தீஸ்கர் முதல்வராக பூபேஷ் பாகல் ஆகியோரது பெயர்களை காங்கிரஸ் கட்சி அறிவித்தது.

ramdass

இதை, அக்கட்சியின் சீனியர்களே எதிர்பார்க்கவில்லை. இப்படியாக அடித்து ஆட துவங்கியிருக்கும் ராகுல் காந்தி, வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் மொடிக்கு பெரும் சவாலாக இருப்பார் என்கின்றனர் விவரமறிந்தவர்கள்.

இந்நிலையில், காங்கிரஸின் இந்த அமோக வெற்றி குறித்து பேசிய மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் துறையின் இணையமைச்சர் ராம்தாஸ் அத்வாலே, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தேர்ந்த அரசியல்வாதியாக திகழ்கிறார் என புகழாரம் சூட்டியுள்ளார்.

மேலும், ராகுலை ‘பப்பு’ என விமர்சித்துக் கொண்டு பாஜகவினர் கூலாக வலம் வருவதாகவும், அவர் தேர்ந்த அரசியல்வாதியாக உருவெடுத்துவிட்டார் என்றும் ராம்தாஸ் அத்வாலே கூறியுள்ளார்.