ராகுல் காந்தி கவர்ச்சியாக இல்லை: வம்பிழுக்கும் சிவசேனா!?

 

ராகுல் காந்தி கவர்ச்சியாக இல்லை: வம்பிழுக்கும் சிவசேனா!?

ராகுல் காந்தியிடம் வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி இல்லை என்று சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 

ராகுல் காந்தியிடம் வாக்காளர்களை ஈர்க்கும் கவர்ச்சி இல்லை என்று சிவசேனா விமர்சனம் செய்துள்ளது. 

shiv sena

மக்களவை தேர்தலில் பாஜக பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துள்ளது. ஆனால்  காங்கிரஸோ கடந்த தேர்தலை காட்டிலும் மிக மோசமான தோல்வியை தழுவியுள்ளது. குறிப்பாக ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இதனால் காங்கிரஸ் மாநில  தலைவர்கள் பலர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வருகின்றனர். 

rahul

இந்நிலையில் காங்கிரஸ் தோல்வி குறித்து குறிப்பிட்டுள்ள சிவசேனா ராகுல் காந்தியின் ஆளுமை வாக்காளர்களைக் கவரவில்லை என்று விமர்சித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் அதிகாரப்பூர்வ நாளேடான சாம்னாவில், ‘கடந்த 2014ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற தோல்வியைக் காட்டிலும் மிக மோசமான தோல்வியை காங்கிரஸ் பெற்றுள்ளது. இதற்கு காரணம்  ராகுல் கவர்ச்சியான ஆளுமையாக இல்லை. அவரின் பேச்சு மக்கள் மத்தியில் எடுபடவில்லை. பிரியங்கா காந்தியை பொதுச்செயலாளராக அறிவித்த போதும், எந்த மாற்றமும் நடக்கவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.