‘ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக’ – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

 

‘ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக’ – கருணாநிதி சிலை திறப்பு விழாவில் ஸ்டாலின் பேச்சு

திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

சென்னை: திமுக முன்னாள் தலைவர் கருணாநிதியின் சிலை திறப்பு விழாவில், ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார்.

திமுக முன்னாள் தலைவரும், முன்னாள் தமிழக முதலமைச்சருமான கலைஞர் மு.கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. திடலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

kalaignar

பாராளுமன்ற காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவருமான சோனியா காந்தி, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, கேரள முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்ட தேசிய தலைவர்கள் பங்கேற்றனர்.

அந்த விழாவில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “என் வாழ்வில் இன்று மறக்கமுடியாத நாள். இன்று மிகுந்த மகிழ்ச்சியில் பூரிப்புடன் இருக்கிறேன். இந்த வேளையில் தலைவர் கலைஞரே நீங்கள் எங்கே போய்விட்டீர்கள்? நீங்கள் எங்கும் போகவில்லை. லட்சக்கணக்கான மக்கள் உள்ளங்களில் சிம்மாசனமிட்டு அமர்ந்துள்ளீர்கள்.  

mk stalin

வேறுபாடற்ற இந்தியாவை உருவாக்க நாம் இங்கு கூடியிருக்கிறோம். மோடியின் ஆட்சியில் இந்தியா 15 ஆண்டுகள் பின்னோக்கி சென்றுள்ளது. தன்னையே ரிசர்வ் வங்கியாக, தன்னையே வருமான வரித்துறையாக நினைத்துக் கொண்டிருக்கிறார் மோடி. 

கஜா புயல் பாதிக்கப்பட்ட தமிழக பகுதிகளை பிரதமர் மோடி பார்க்க வரவில்லை. சாடிஸ்ட் பிரதமராக செயல்பட்டு வருகிறார் மோடி. தமிழகம் என்றால் அவ்வளவு அலட்சியமா? எனவே அவரை வீழ்த்துவதற்கு 21 கட்சிகள் இணைந்திருக்கின்றன. 

kalaignar

ராகுல் காந்தியை பிரதமராக்க முன்மொழிறேன். நாட்டை ராகுல்காந்தி காப்பாற்ற வேண்டும். மேடையில் மற்ற தலைவர்களும் ராகுலை வேட்பாளராக ஆதரிக்க வேண்டும். ராகுல் காந்தியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். ராகுல் காந்தியே வருக, நாட்டுக்கு நல்லாட்சியை தருக!” என சிறப்புரையாற்றினார்.