ராகுல்ஜி நீங்க வீட்டிலேயே இருங்க! இங்க எல்லாம் வர வேண்டாம்… காஷ்மீர் கவர்னர் ….

 

ராகுல்ஜி நீங்க வீட்டிலேயே இருங்க! இங்க எல்லாம் வர வேண்டாம்… காஷ்மீர் கவர்னர் ….

பல்வேறு நிபந்தனைகளை விதித்ததால், ராகுல் காந்திக்கு காஷ்மீர் வருமாறு விடுத்த அழைப்பை திரும்ப பெறுவதாக காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் தெரிவித்தார்.

சிறப்பு அந்தஸ்து நீக்கியது மற்றும் காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதால் அங்கு கலவரம் நடப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கூறினார். ஆனால் காஷ்மீரில் அமைதி நிலவுவதாகவும், விமானம் அனுப்புகிறேன், வந்து காஷ்மீர் நிலவரத்த பாருங்க, அப்புறம் பேசுங்க என்று ராகுல் காந்திக்கு கவர்னர் சத்ய பால் மாலிக் பதில் கொடுத்தார்.

ராகுல் காந்தி

இதனையடுத்து ராகுல் காந்தி, நான் ஒரு குழுவுடன் வருவேன், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்களை சந்திக்க வேண்டும் என பல்வேறு நிபந்தனைகளை விதித்தார். இதனால் சூடான கவர்னர் சத்ய பால் மாலிக் ராகுலுக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெறுவதாக கூறியுள்ளார். செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் ஜம்மு அண்டு காஷ்மீர் கவர்னர் சத்ய பால் மாலிக் கூறியதாவது: இங்கு வந்து சூழ்நிலையை பார்க்கும்படி அவருக்காகத்தான் நான் அழைப்பு விடுத்தேன். ஆனால் அவர் பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறார்.  குழுவோடுதான் வருவேன், அப்புறம் வீட்டுக்காவலில் உள்ள தலைவர்களை சந்திக்க வேண்டும் என்கிறார். 

காஷ்மீர் நிலவரம்

இது எல்லாம் நடக்க கூடிய காரியமா? இத்தகைய நிபந்தனைகள் இருந்தால் அவருக்கு நான் அழைப்பு விடுக்க மாட்டேன். எனவே அவருக்கு விடுத்த அழைப்பை திரும்ப பெறுகிறேன். கடந்த வாரம 20 இந்திய டி.வி. நியூஸ் சேனல்கள் இங்கு இருந்தன. அவர்களிடம் ராகுல் பேசட்டும். அவர்களிடமிருந்து காஷ்மீர் நிலவரத்தை அவர் தெரிந்து  கொள்ளட்டும். 

ஆகஸ்ட் 15ம் தேதிக்கு பிறகு காஷ்மீரில் கட்டுப்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாக தளர்த்தப்படும். ஒரு வாரம் அல்லது 10 நாட்களில் தொலைத்தொடர்பு சேவைகள் படிப்படியாக வழங்கப்படும். இவ்வாறு  அவர் கூறினார்.