ராகுல்காந்தி பிரசாரம் செய்யவிருந்த மேடை சரிந்து விழுந்து விபத்து!

 

ராகுல்காந்தி பிரசாரம் செய்யவிருந்த மேடை சரிந்து விழுந்து விபத்து!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது.

தேனி: காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி தேனியில் பிரசாரம் செய்யவிருந்த மேடை சரிந்து விபத்துக்குள்ளானது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நேற்று முடிந்துள்ளது. இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 18-ம் தேதி நடைபெறவுள்ளது. அன்றைய தினம், தமிழகம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் உள்ள 97 தொகுதிகளுக்குமான மக்களவை தேர்தலும், தமிழகத்தில் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தலும் நடைபெறவுள்ளது.

rahul stalin

வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. அந்த வகையில் காங்கிரஸ் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் இன்று தமிழகம் வந்துள்ளார். கிருஷ்ணகிரி, சேலம், தேனி, மதுரை ஆகிய நான்கு இடங்களில் அவர் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.

இந்நிலையில், தேனி காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து மாலை 4.30 மணியளவில் அவர் பிரசாரம் மேற்கொள்ளவிருந்த மேடை சரிந்து விழுந்து விபதுக்குள்ளகியுள்ளது. இதையடுத்து, சரிந்து விழுந்த மேடையை சீரமைக்கும் பணிகள் துரித கதியில் அங்கு நடைபெற்று வருகிறது.

இதையும் வாசிங்க

பக்தர்களின் செருப்பை துடைத்து, ஓட்டு போட வேண்டாம் என்று கேட்ட பெண்: திருச்சியில் பரபரப்பு!