ராகுலும் இல்லை, மோடியும் இல்லை; பிரதமராகும் 3-வது நபர்? ஆச்சரியம் அளிக்கும் சர்வே முடிவு

 

ராகுலும் இல்லை, மோடியும் இல்லை; பிரதமராகும் 3-வது நபர்? ஆச்சரியம் அளிக்கும் சர்வே முடிவு

நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இல்லாமல் 3-வது நபருக்கே அதிகம் இருப்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

சென்னை: நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராகும் வாய்ப்பு ராகுல் காந்திக்கும், மோடிக்கும் இல்லாமல் 3-வது நபருக்கே அதிகம் இருப்பதாக பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் அடுத்த வருடம் நடைபெற இருக்கிறது. ஆட்சியை தக்கவைக்க வேண்டும் என பாஜகவும், பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் தற்போதில் இருந்தே வியூகங்களை வகுத்து வருகின்றன. இதற்காக பாஜகவுக்கு எதிராக இந்திய அளவில் மெகா கூட்டணியை உருவாக்கும் முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஈடுபட்டுள்ளார். இதற்காக அவர் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட ஏராளமான தலைவர்களை சந்தித்து வருகிறார்.

இதற்கிடையே இந்திய அளவில் பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்து மூன்றாவது அணி ஒன்றை உருவாக்க தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் முயன்று வருகிறார். இதற்காக அவரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்டோரை சந்தித்தார். ஆனால் திமுகவோ இதுவரை எந்த முடிவும் எடுக்காமல் இருந்து வருகிறது. காங்கிரஸ் – பாஜக அல்லாத மூன்றாவது அணியில் பிராந்திய கட்சிகள் ஒன்றிணைந்தால் நாடாளுமன்ற தேர்தலில் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நிச்சயம் வெல்லலாம் என திடமாக நம்புவதால் இந்த முயற்சியை சந்திரசேகர ராவ் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால் இந்திய அளவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து பாஜகவை வீழ்த்தி ராகுல் காந்தியை பிரதமர் அரியணையில் ஏற்றவும் வாய்ப்புகள் அதிகம் என அரசியல் நோக்கர்கள் கூறி வருகின்றனர். மேலும் பாஜகவின் எதிர்ப்பு வாக்குகள் அனைத்தையும் காங்கிரஸ் இந்த தேர்தலில் அறுவடை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

rahul

இந்நிலையில் தமிழகத்தை சேர்ந்த பிரபல தனியார் தொலைக்காட்சி ஒன்று நாடாளுமன்ற தேர்தலில் பிரதமராவதற்கு யாருக்கு வாய்ப்புகள் அதிகம் என்ற கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. இதில் அனைவருக்கும் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 3-வது நபருக்கு 45%, ராகுல் காந்திக்கு 36%, மோடிக்கு 19% மட்டுமே வாக்குகள் கிடைத்துள்ளன.

rahl

அதேபோல் 2018-ம் ஆண்டு ஜூலை மாதத்தில் 20 சதவீதமாக இருந்த மோடியின் செல்வாக்கு நவம்பர் மாதத்தில் 19%-ஆக குறைந்துள்ளது. ராகுல் காந்திக்கு ஜூலை மாதத்தில் 37%-ஆக இருந்த செல்வாக்கு தற்போது 36%-ஆக குறைந்துள்ளது. ஆனால் ஆச்சரியம் அளிக்கும் விதமாக 3-வது நபருக்கு ஜூலை மாதத்தில் 43%-ஆக இருந்த செல்வாக்கு தற்போது 45%-ஆக உயர்ந்துள்ளது. 

gandhi

மேலும் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என 71 சதவீதத்தினரும், வேண்டாம் என 13 சதவீதத்தினரும், பின்னர் முடிவு செய்யலாம் என 16 சதவீதத்தினரும் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.